ரிக் வேதமும் அப்பரடிகள் தேவாரமும்:
"இனி, வடமொழிநூல்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையதாகிய இருக்கு வேதத்தின் முதன் மண்டிலம், 43 ஆம் பதிகம் உருத்திரன் ஒருவனே அறிவிலும் வரங்களை மிக வழங்குதலிலும் ஆற்றலிலும் சிறந்தோன் என்றும், எல்லா உயிர்களின் நோய்த் துன்பத்தை நீக்குவோன் என்றும், அவனே பாட்டுகட்கும் வேள்விகட்கும் தலைவன் என்றும், அவன் கதிரவன் ஒளியைப் போலவும், பொன்னைப் போலவும் விளங்குவோன் என்றும் கடவுளர் எல்லார்க்கும் அவனே தலைவன் (ச்ரேஷ்டோ தேவாநாம்), எல்லா தேவரிலும் அவனே ஈகையிற் சிறந்தோன் என்றும் எல்லாவுயிர்கட்கும் நலங்களை அருள்வோன் அவனே என்றும் வலியுறுத்திக் கூறுதல் காண்க." 46