1. கற்பெருந்துாண் புணையாகக் கடல்கடந்தை யாற்றில்எழிற் கயிலை கண்டு
பற்பணியின் விடந்தீர்த்தப் பூதிமக வுயிரளித்துப் பதிகச் சொல்லால்
பொற்புறுவே தாரணியக் கதவுதிறந் தருட்புகலுார்ப் பொருளிற் சேர்ந்த
அற்புதநா வுக்கரசன் அடியிணைப்பூ முடியிலுற அமைத்தல் செய்வாம்
-துறைசைப் புராணம்
2. ஒருநாளில் உடல் வெறுத்தே உயிர் வெறுத்தே உடைமையெலாம் ஒருவிப் போந்தே
அருநாவின் மறைபாடும் பிறைசூடி அடித்தொழும்பே அவையாக் கொண்டு
வருநாளின் உயிர்ச் சிறுமை இறைபெருமை உலகறிய மகிழ்ந்து பாடுந்
திருநாவினரசர் எனச் செம்மைமொழி அடிகளடி சென்னி வைப்பாம்
- திருநாகேச்சுரப் புராணம்
3. கொண்டாலாடிய விழிகளுங் கோலவெண் ணீற்று
வண்டலாடிய மேனியும் மல்குமானந்தம்
உண்டதாங் கெதிரெடுத்தென ஓதுசெம் பாட்டுங்
கண்டு கேட்டருள் நாவினுக் கரசினைக் கலப்பாம்
- திருவானைக்காப் புராணம்
4.கரைபொரு திரங்கு விரிதிரைக் கடலிற் கட்டினர் இட்டகற் றிரளே
பரிவுறு புணையா அதனில்வீற் றிருந்து பழுத்தபாண் மிழற்றுவண்டினமார்
முருகவி ழிதழித் தொடை சடைமுடித்த முதல்வனை வழுத்திய கோமான்
மருவுயிர்த்தினிய முருகுகொப் பளிக்கு மலரடி வணங்குதல் செய்வாம்
-சங்கர நாராயண சுவாமி கோயிற் புராணம்
5. விஞ்சை கற்பன வேறிலை விடையவன் பதங்கள்
அஞ்சு மேயென அறியஎவ் வுலகுங்கற் புணையா
நெஞ்சு துட்கெனு நெடும்புனல் வேலையும் பிறவி
வஞ்ச வேலையு நீந்திய மன்னனைப் பணிவாம்
-பேரூர்ப் புராணம்
6.பொய்யுரை நுால்சில புகலுந் தீயமண்
கையர்கள் பிணித்துமுன் கடலகத்திடு
வெய்யகற் றோணியாய் மிதப்ப மேற்படு
துய்ய சொல்லரசர் தாள்தொழுது போற்றுவாம்
-கந்தபுராணம்
7. தேவரையு முனிவரையுந் துளவமார்பிற்
றிருவரையுங் குரவரையுஞ் செல்வமிக்கோர்
யாவரையும் ஏவல்கொளும் நெற்றிநாட்டத்
திறைவரை முன்னிகந்திருந்த வெண்ணந்தோன்றச்
சேவரையு நெடுங்கொடியின் தகைமையெல்லாத்
திசைவரையுஞ் செலத்தமிழின் செய்யுள்பாடு
நாவரையர் புகழ்மொழிகளள் வரைந்துகூறி
நயந்தவர்செய் திருத்தொண்டு வியந்து வாழ்வாம்
-சேதுபுராணம்
8. ஆரணநன் னிலையறியாச் சாக்கியர்கள் அருங்கற்றுாண்
பாரறிய மருங்கசைத்துப் படுநீரிற் புகவுந்த
வாரணநல் உரியானை ஏத்திமுந்நீர் வடதளிரின்
நாரணன்போல் இனிதமர்ந்த நாவலன்பொற் தாள்தொழுவாம்
-பிரமோத்தர காண்டம்
9. அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தால் அஞ்சா
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சகரிட்ட நீல
நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய ஏழு
பிறப்பெனுங் கடலும் நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்
-திருவிளையாடற் புராணம்
10. பரித்தரிப்பாம் பாசம் பரமசிவன் பாதந்
தரித்துயர்ந்த வாகீசர் தாள்
- சைவ சமய நெறி
11. கருவாழிக் கரைகாணாச் சாக்கியர்கள் கற்றுாணிற் சிக்க யாத்துப்
பெருவாழியிடை வீழ்ப்பவது புணையாக் கரையேறிப் பெட்பினுள்ளம்
உருகா மெய்ம்மயிர் பொடிப்ப வோங்கெயின் மூன்றெரித்தோனை யுவந்து பாடுந்
திருநாவுக்கரசனிரு சேவடிப்பூங்கமல மலர்சென்னி சேர்ப்பாம்
-காசி கண்டம்
12.கோட்டிபத்தைப் பணிவித்துக் கொலைவிடத்தை யமுதாக்கிப்
பூட்டியமா மறைக்காட்டிற் பொற்கதவந் திறப்பித்துக்
கூட்டியகற் பிணைமிதப்பக் கொற்றவனைந் தெழுத்தமைந்த
பாட்டிசைக்கு நாவரையர் பதமலரைப் பணிந்திடுவாம்
-திருவாடானைப் புராணம்
13.முழுதுல கீன்ற தாயே முலைசுரந் துாட்ட உண்டு
தழுவருட் சிவபிரானைத் தந்தையாக் கொண்ட வள்ளல்
தொழுதுகை அப்ப ரேயென் றுவகையிற் தொடரப் பெற்ற
வழுவறு வாக்கின் வேந்தர் மரலடி வழுத்தி வாழ்வாம்
- திருத்துருத்திப் புராணம்
14.அளக்கர்நீர் தகளிநெய் அருகர் இட்டகல்
விளக்கருந் திரியென அமண மாசிறா
டுளக்க வைஞ்செழுத் தெனும் துாண்டு கோலினால்
விளக்கென விளங்குநா வேந்தைப் போற்றுவாம்
-
திருவையாற்றுப் புராணம்
15. திருநீற்றை மெய்யழுத்தி அஞ்செழுத்தை நெஞ்சழுத்திச் சிலைக்கை மாரன்
உருநீற்றும் பெருமானை உறவழுத்திச் சமணரெனும் ஒன்னார் மூட்டும்
பொருநீற்றுக் குடவரையுங் கடகரியும் விடவரவும் புறங்கண்டாழிக்
கருநீத்தங் கடப்பவொரு கற்றோணி உகைத்தானைக் கருத்துள் வைப்பாம்
-திருக்குற்றாலத் தலபுராணம்
16. கலகமிடும் பொய்ச் சமணர் குழாங்கட்டிக் கடலினிடைப் புகுத்த
உலகம் பரவவிடுத்த கல்லே உயரும் புணையாக் கரையேறி
இலவவிதழோர் பங்கமைத்த எம்மான் கமலத்தாள் பழிச்சுந்
சொலவின் புணையாப் பவக் கடலுங் கடந்தான் சரணத்தினைத் துதிப்பாம்
-திருச்செந்துார்த் தலபுராணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக