கி.பி. 1,2,3 ஆம் நூற்றாண்டுகளில் வளத்திலும் வாழ்விலும் குறையொன்றும்இல்லாதிருந்த தமிழ்நாடு 4 ஆம் நூற்றாண்டளவிலே பெரும் நலிவைச் சந்தித்தது. இன்றைய கர்நாடகம் மற்றும்அதன் வடபகுதிகளில் வாழ்ந்தவர்கள் தமிழகத்தின்மீது படையெடுத்து நெடுங்காலம் ஆண்டனர்.
சமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 26 மார்ச், 2009
வியாழன், 19 மார்ச், 2009
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் நன் நோக்கம்
”நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலிஷ் வித்தியாசாலையிலே இங்கிலிஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841)பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனாயினேன். பிதிரார்ச்சிதம் நான் பெறவில்லை.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
3.024.திருக்கழுமலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3052 | மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே | 1 |
உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)