கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

சிவாலயங்களும் சைவசமயமும்


- சித்தாந்த  பண்டித  பூஷணம்  ஆ.ஈசுரமூர்த்திப்  பிள்ளை,
திருநெல்வேலி  பேட்டை

 சிவாலயங்களைத்  தத்தமக்குச்  சொந்தமாக்க  விரும்பும்  எவரும்  "ஆலயங்களெல்லாம்  ஒரு மொழியின்   நிலயமல்லவே; ஒரு  சாதியின்  நிலயமல்லவே, ஒரு  சமயத்தின் நிலயமல்லவா?அச்சமயத்தை  நாம்  தழுவுகின்றோமா? அங்ஙனமாயினன்றோ  ஆலயங்களில்   நமக்கு   உரிமை யெய்துதல்   கூடும்?"   என்று இன்னோரன்னவற்றை யெல்லாம் நெஞ்சறியத் தமக்குள் விவகரித்துப் பார்த்தல் வேண்டும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

சிவாலயங்களின் இக்கால நிலை


- சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை,
திருநெல்வேலி பேட்டை

     தமிழ்நாட்டின் பழைய சமயம் சித்தாந்த சைவம். அதன் விரிவையும் உயர்வையும் எடுத்துரைப்பன வடமொழியிலுள்ள வேதசிவாகமங்களும் தமிழிலுள்ள திருமுறை சித்தாந்த சாத்திரங்களுமாம்.  அந்நூல்களெல்லாம் எண்ணும் எழுத்தும் அறிந்தார்க்கே பயன்படும்.

சைவாலயங்கள்


- சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, திருநெல்வேலி பேட்டை
 

    பரமசிவனார் சகல தேவர்களுக்கும் ராஜர். அவராலயம் அரசமாளிகை. அரசமாளிகையில் அரசன், அவன் மனைவிமார், மைந்தர், அருள்பெற்றுடையார், உத்தியோகஸ்தர், குற்றேவலாளர் முதலிய பலருமிருப்பர்.  அப்படியே சிவாலயத்திற் சிவராஜர், அவர் மனைவியராகிய பார்வதீ தேவியார், மைந்தராகிய விநாயகர், பைரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர், அருள்பெற்றுடையராகிய நாயன்மார், உத்தியோகஸ்தராகிய பிரம விஷ்ணுவாதியோர், குற்றேவலாளராகிய நவக்கிரகாதியன முதலியோரெல்லாங் கூடியிருப்பர்.

Translate