(தினமலர் நாளிதழில் வெளியான நாள் 11-02-2012)
(இக்கட்டுரை வெளியாகி இன்றோடு எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. எனினும் யாழ்ப்பாண நிலைமையில் மாற்றம் எதுவும் நேரவில்லை என்பதை 29-10-2012 அன்று `தி ஹிந்து' பத்திரிகையில் வெளியான கட்டுரை நிரூபித்திருக்கிறது. அதைப் படிக்க இங்கே சொடுக்கலாம்: In post-war Jaffna, a slow piecing back of life)
இலங்கையின் வடபகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதி, இப்போது எப்படி இருக்கிறது? யாழ்ப்பாணம் பகுதியில், இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்த போது, மனதை நெருடும் பல காட்சிகள் கண்ணில் பட்டன.