ஞாயிறு, 29 மார்ச், 2020

பச்சைப் பதிகம் முதல் திருப்பாட்டின் பொருள்


-வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளை
  
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

இந்தத் திருப்பாட்டின் பொருளை நாம் தெரிவதற்கு முன்னர் ஒரு சிறிது திருநள்ளாற்றைப் பற்றியும் இந்தப் பதிகத்தின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வது நலம்.

சைவ மாத இதழ்கள் - 19 ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் - ஓர் அறிமுகம்



தமிழில் வெளியான, வெளியாகும் தினசரி, வார, இருவார, மாத மற்றும் பருவ இதழ்கள் பற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலன, இலக்கிய இதழ்களைப் பற்றியும் அரசியல் இதழ்களைப் பற்றியும் மேற்கொள்ளப்பட்டவையே. அரிதிலும் அரிதாக, கலை, அறிவியல் உள்ளிட்ட இதழ்களைப் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளன.

செவ்வாய், 3 மார்ச், 2020

திருநள்ளாற்று சனி யார்?


திருநள்ளாற்றில் உள்ள சனி பகவான் சன்னிதி உண்மையில் அதுதானா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஒன்பான் கோள்களை வைத்து ஜோதிட வியாபாரம் செய்யும் போக்கு சமீப காலத்தில்தான் ஏற்பட்டது.

ஈசுரமூர்த்திப் பிள்ளையின் கட்டுரைகள்


1914இல் திருவனந்தபுரத்திலிருந்து வெளியான தமிழன் மாத இதழ் முதல் தருமையாதீனத்தின் ஞானசம்பந்தம் இதழ் ஈறாக ஆ. ஈசுரமூர்த்தி பிள்ளை எழுதிய 21 கட்டுரைகளை சேகரித்துள்ளேன். இன்னும் பல மாத இதழ்களில் அவர் எழுதியிருக்கக்கூடும்; அவற்றையும் தேடி வருகிறேன்.

காரைக்காலம்மையாரின் முற்பிறவி நீலியா?


சோழர் காலச் செப்புப் படிமங்கள் என்ற தலைப்பில் ஐ.ஜோப் தாமஸ் என்பவர் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நுாலில் இருந்து ஒரு கட்டுரை இன்று (17-10-2019), இந்துதமிழ் திசை நாளிதழின் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் வெளியாகியுள்ளது. காரைக்காலம்மையாரின் செப்புப் படிவங்கள் பற்றிய கட்டுரை அது. இந்தக் கட்டுரையில் சில பிழைகள் உள்ளன.

திங்கள், 2 மார்ச், 2020

கொழும்பு சைவ பரிபாலன சபை எது?


திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளையின் தந்தையார் த.ஆறுமுக நயினார் பிள்ளை. கவிராயர் பரம்பரையில் வந்த கவிவல்லவர்.

Translate