வியாழன், 9 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 10


வேதங்கள் பற்றி அப்பரடிகளின் குறிப்புகள்:
ப்பரடிகள் தேவாரத்தில் வேதங்களின் பழமையையும் தொன்மையையும் நிலையான தன்மையையும் குறிப்பிடும் அடைகள் கொடுத்தல்; வேதங்கள் கூறும் வேள்விகளைக் குறிப்பிடுதல்; இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களில் மறையவர்கள் வாழ்தல்; மறையவர் இசைக்கும் வேதவொலி, வேள்விப்புகை ஆகியவற்றைக் குறிப்பிடுதல் ஆகியன இங்குக் கவனிக்க வேண்டியவையாகும். (எண்கள் திருமுறை - பதிகம் - பாடல் எனும் முறையில் அமைந்தவை)1. "வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை" - 6-2-2
2. "அருமறை" - 6-1-1, 6-1-6
3. "தூயமறை" - 6-17-5
4. "நான்மறை" - 6-18-4
5. "பெரிய வேதம்" - 6-26-5
6. "ஓமத்தால் நான்மறைகள் ஓதலோவா ஒளிதிகழும் ஒற்றியூர்" - 6-45-2
7. "தெய்வநான் மறைகள்" - 6-63-4
8. "மறையோடு அங்கம் கொண்டாடும் வேதியர்" - 6-73-10
9. ”சொல்மலிந்த மறைநான்கு ஆறு அங்கம்" - 6-75-1
10. "மாமறைகள்" - 6-76-2
11. "சீராகும் மறை" - 6-83-4
12. "தகை நால்வேதம் ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தரும் ஓமாம்புலியூர்” - 6-88-8
13. "தீதிலா மறையோனை" - 6-90-8
14. "அரிய நான்மறை" - 5-10-4
15. "நல்ல நான்மறை" - 5-17-6
16. "ஆரண நான்மறை" - 5-38-7
17. "அழகாகிய நான்மறை" - 5-51-4
18. "சொல்லா மறை" - 5-68-8
19. "வேள்வியை வேட்க வைத்தார்" - 4-30-2
20. "பண்டைநான் மறைகள்" - 4-40-4
21. "ஓமத்துள் ஒளியதாகும்" - 4-45-4
22. "ஆறுமோர் நான்கு வேதம் அறமுரைத் தருளினானே" - 4-51-3
23. "மன்னுமறைகள்" - 4-100-3
24. "சதுர்வேதங்கள்" - 4-100-8
25. "வேதம் நான்கும், கல்லாலின் நீழற்கீழ் அறங்கண்டானை" - 6-20-8
26. "ஊனமில் வேதம்" - 4-93-2
27. "குற்றமில் வேதம்" - 4-93-5வேதங்களையும் ஆறு அங்கங்களையும் இறைவனே அருளிச் செய்தனன்; சனகாதி நால்வர்க்கும் அருளிச் செய்தனன்; தேவர்களும் ரிஷிகளும், மனிதர்களும் அவ்வேதத்தைச் சொல்லியே அவனை வழிபடுகின்றனர்; இறைவன் வேதப் பொருளானவன்; வேதத்திற்கும் அப்பால் இருப்பவன் என்பனவாதிய திருவாக்குகள் இவை:


1. "விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்" - 4-7-8
2. "கூறினர் வேதமும் அங்கமும்" - 4-10-2
3. "அங்கமும் வேதம் வைத்தார்" - 4-30-8
4. "அங்கங்கள் ஆறு நான்கும் அந்தணர்க்கருளிச் செய்து" - 4-29-10
5. "நங்களுக் கருளதென்று நான்மறை ஓதுவார்கள் தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்" -4-32-3
6. "வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவியேத்த" - 4-35-5
7. "விடுத்தனன் கைநரம்பால் வேதகீதங்கள் பாடக் கொடுத்தனர் கொற்ற வாணாள்"- - 4-49-10
8. "இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு மந்திர மறையதோதி வானவர் வணங்கி வாழ்த்த" -4-65-5
9. "தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியின் நன்னீர் கொண்டிருக்கு ஓதியாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி" - 4-75-1
10. "மந்திரிப்பார் ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன" - 4-92-14
11. "ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன" -4-92-17
12. "மாமறைகள் சொன்ன துறைதொறும் தூப்பொருளாயின" - 4-100-1
13. "ஆரணத்தின் வேண்டும் பொருள்கள் விளங்கநின்று ஆடின" - 4-100-6
14. ”
கூடவொண்ணாச் சயம்புவென்றே தகு தாணுவென்றே சதுர்வேதங்கள் நின்று, இயம்பும் கழலின இன்னம்பரான்தன் இணையடியே" - 4-100-8
15. "மறை தேடும் எந்தாய்" - 4-113-7
16. "ஆரணப் பொருளாம் அருளாளனார்" - 5-68-2
17. "அருமறையின் அகத்தானை" - 6-1-1
18. "மந்திரமும் மறைப் பொருளும் ஆனார் தாமே" - 6-3-4
19. "மறைகலந்த மந்திரமும் நீருங்கொண்டு வழிபட்டார் வானாளக் கொடுத்தியன்றே" -6-40-2
20. "நம்பியையே மறைநான்கும் ஓலமிட்டு வரமேற்கும்" -6-40-5
21. "ஆறங்கம் நால்வேதத்து அப்பால் நின்ற பொருளானை" - 6-54-4
22. "வேதியனை வேதவித்தை" - 6-54-7
23. "நால்வேதத்து அப்பாலானே" - 6-63-9
24. "ஆலதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம்பொருள் வீடின்பம் ஆறங்கம் வேதம் தெரித்தானை" -6-66-2வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுதல், இறைவனின் பெயர்களைக் குறிப்பிடுதல், ஐவகை வேள்வியினைக் குறிப்பிடுதல் ஆகியன இவை:


1. "பாடினார் சாமவேதம்" - 4-27-2
2. "முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி" - 4-29-4
3. "சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்புதன்னை" - 4-45-4
4. "சமயமேலாறுமாகித் தானொரு சயம்புவாகி" - 4-45-5
5. "எண்ணுடை இருக்குமாகி இருக்கினுட் பொருளுமாகி" - 4-48-3
6. "சாமவேதர்" - 4-64-7
7. "உருத்திர மூர்த்தி போலும்" - 4-72-7
8. "உலகமூர்த்தி" - 4-75-7
9. "உம்பரானை உருத்திர மூர்த்தியை" - 5-62-7
10. "வாமதேவன்" - 5-92-6
11. "சாமவேத கந்தருவம் விரும்புமே" - 6-4-1
12. "அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்" - 6-23-8
13. "ஓங்காரன் காண்" - 6-24-2
14. "நின்மலன் காண்" - 6-24-5
15. "சிவனென்று நானுன்னை எல்லாம் சொல்ல" - 6-37-8
16. "பரமயோகி" - 6-45-2
17. "பவித்திரனைப் பசுபதியை" - 6-46-5
18. "சந்தோக சாமம் ஓதும் வாயானை" - 6-50-4
19. "சதாசிவன் காண்" -6-52-7
20. "ஐவேள்வி ஆறங்கமானார் போலும்" - 6-53-4
21. "அமலன் கண்டாய், அவிநாசி கண்டாய், பகவன் கண்டாய்" - 6-73-7
22. "எரிபுரியும் இலிங்கபுராணத்துளானை" - 6-74-8
23. "சங்கரனைச் சம்புதன்னை" - 6-80-10
24. "உருத்திரனை உமாபதியை" - 6-90-5
25. "பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்" - 6-96-11
26. "மாதேவா மாதேவா என்று வாழ்த்தி" - 6-98-3
27. "தீர்த்தமான தியம்பகன்" -6-12-7
28. "சிவமூர்த்தி" - 6-12-9
29. "சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்" - 6-96-10

இங்கு அருளிச் செய்த பெயர்கள் எல்லாம் வடமொழியின என்பதைக் கருத்தில் கொள்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate