வைணவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைணவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூன், 2009

மகிழ்மாறன் சடகோபன்

வரும் பொருநைத் துறையாடப் பெறுவேனாகில்
வடமூலைக் கருடனடி பணிவேனாகில்
அரும்புமணிக் கோபுரத்துட் புகுவேனாகில்
ஆதிநாதன் சரணம் தொழுவேனாகில்
விரும்பு திருப்புளிநீழல் வலமாய் வந்துன்
மெய்ஞ்ஞான முத்திரைக்கை காண்பேனாகில்
தரும்புவியில் இப்பிறப்பே வேண்டுகின்றேன்
சடகோப யதிராசன் தம்பிரானே.

விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது.

புதன், 29 ஏப்ரல், 2009

தென் திசைத் திலகம் திருமாலிருஞ்சோலை

ரம், விபவம், வியூகம், அர்ச்சை எனும் 4 நிலைகளில் திருமால் உயிர்களுக்கு அருள்புரிகின்றார் என வைஷ்ணவ ஆகமங்கள் கூறும். இந்நான்கினையும் சங்கர்ஷணன், வாசுதேவன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என அவை அழைக்கும். இதைப் பற்றிய குறிப்பொன்று பரிபாடலில் உள்ளது.

சனி, 4 ஏப்ரல், 2009

உலகளந்த உத்தமன்


வேதம் அனைத்திற்கும் வித்தாகும் தமிழருளிச் செய்த கோதை, திருப்பாவை 4 ஆம் பாசுரத்தில் `தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்' என்று அருளிச் செய்தபடியே, மழை பெய்து கொண்டிருந்த (2008) மார்கழி 3 ஆம் நாளில், சென்னை ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் வேளுக்குடி கிருஷ்ணனின் திருப்பாவை உரை நிகழ்ந்தது. கேட்டவர்களைப் பிணிக்கும் தன்மையதாய் திகழ்ந்த அவர் உரையிலிருந்து சில...  

Translate