- சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை,
திருநெல்வேலி பேட்டை
தமிழ்நாட்டின் பழைய சமயம் சித்தாந்த சைவம். அதன் விரிவையும் உயர்வையும் எடுத்துரைப்பன வடமொழியிலுள்ள வேதசிவாகமங்களும் தமிழிலுள்ள திருமுறை சித்தாந்த சாத்திரங்களுமாம். அந்நூல்களெல்லாம் எண்ணும் எழுத்தும் அறிந்தார்க்கே பயன்படும்.