6. சிவசன்மா தெய்வலோகங் கண்ட அத்தியாயம் (10வது அத்தியாயம்)
(பாடல் 45 முதல் 52 வரையிலானவை, விசுவாநரன், வீரேசுவரரைத் துதித்தது என, விஷ்ணுகணங்கள், சிவசன்மாவுக்கு உரைத்தது. இவை சிவாஷ்டகம் எனப் பெயர் பெறும்)
அருவுருவாய் ஏகமாய் அக்குணங்குறிகள் எவையுமின்றி அசலமாகி
நிருமலமாய் எவ்வுயிர்க்கும் உயிராகிச் சுடரொளியாய் நித்தமாகிக்
கருதரிய ஆனந்தக் கடலாகிமெய்ஞ்ஞானக் கனியாய் நின்ற
வரதநின் அடிக்கமலம் மனத்திருத்தி கொழுமலர்துாய் வழுத்தல் செய்வாம் - 45