அது 1994 - 95 என நினைக்கிறேன். பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயில் அதன் பரம்பரை தர்மகர்த்தாவால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியிருந்தது. பிரம்மோற்சவம் முதல் எந்த திருவிழாவும் நடக்கவில்லை. சொத்துக்கள் இருந்தும் சொல்லிக் கொள்ளும்படி வருமானமில்லை. சிவராத்திரி முடிந்த மறுநாள். வழக்கம் போல் சாயரட்சை முடிந்ததும், நாங்கள்தான் குடவருவாயில் பெரியகதவு, நடுவில் உள்ள பெரிய கம்பிக்கதவு ஆகியவற்றை அடைத்துக் கொண்டிருந்தோம்.