திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளையின் தந்தையார் த.ஆறுமுக நயினார் பிள்ளை. கவிராயர் பரம்பரையில் வந்த கவிவல்லவர்.
பேட்டை தலபுராணம், மகா சைவர் புராணம் என்ற சாலிய அந்தணர் புராணம், நற்குடி வேளாளர் வரலாறு என, 20ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் பல புராண இலக்கியங்களைப் படைத்தவர்.
தென்காசி தலபுராணத்திற்கு குறிப்புரை எழுதியுள்ளார். விக்கிரக ஆராதனம், தெளிவுமதித் திறவுகோல் உள்ளிட்ட சில சிறுநுால்களையும் படைத்துள்ளார்.
இவரது பின்னணியையும் இவர் எழுதிய நுால்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இவர் எழுதிய நுால்களின் முகப்பில், கொழும்பில் சைவ பரிபாலன சபையில் சித்தாந்த போதகாசிரியராக இருந்ததாக இவரே குறிப்பிட்டுள்ளார்.
1926ல் கொடிக்கவி, திருவருட்பயனுக்கு உரை எழுதி வெளியிட்ட பதிப்பிலும் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை, தனது தந்தைக்கு அடைமொழியாக சைவ பரிபாலன சபையில் போதக ஆசிரியராக இருந்ததை குறிப்பிடுகிறார்
இதுகுறித்து யாழ்ப்பாணம் Mayoorakiri Sharma Lambotharan Ramanathan ஆகியோரிடம் கேட்டபோதும் அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு சைவ பரிபாலன சபை இருந்துள்ளது. 1888ல் தொடங்கப்பட்டு இன்று வரை நடந்து வருகிறது. அந்த சபையும், ஆறுமுக நயினார் பிள்ளை குறிப்பிடும் கொழும்பு சபையும் ஒன்றா வேறா என்ற குழப்பம் இருந்து வருகிறது.
அறிந்தவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
(கொழும்பு_சைவ_பரிபாலன_சபை_எது? - 2019, செப்டம்பர் 29ல் எனது முகநுால் பக்கத்தில் வெளியிட்ட பதிவு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக