செவ்வாய், 3 மார்ச், 2020

ஈசுரமூர்த்திப் பிள்ளையின் கட்டுரைகள்


1914இல் திருவனந்தபுரத்திலிருந்து வெளியான தமிழன் மாத இதழ் முதல் தருமையாதீனத்தின் ஞானசம்பந்தம் இதழ் ஈறாக ஆ. ஈசுரமூர்த்தி பிள்ளை எழுதிய 21 கட்டுரைகளை சேகரித்துள்ளேன். இன்னும் பல மாத இதழ்களில் அவர் எழுதியிருக்கக்கூடும்; அவற்றையும் தேடி வருகிறேன்.


குறிப்பாக பலவான் குடியிலிருந்து வெளியான 'சிவநேசன்' மாத இதழில் அவர் நிறைய கட்டுரைகள் எழுதினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்த அந்த இதழின் முழு தொகுப்புகளையும் இப்பொழுது பார்க்க முடியவில்லை. ஒரு சில தொகுப்புகள் ரோஜா முத்தையா நூலகத்திலும் உ.வே.சா. நூலகத்திலும் உள்ளன. அந்த இதழ் குறித்து தகவல் அறிந்தோர் தெரிவித்துதவ வேண்டுகிறேன்.

இது தவிர கோவையில் இருந்து வெளியான 'சிவாகம வித்யா' மாத இதழ் தொகுப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. மேலும் பழனி முருகன் கோவில் தேவஸ்தான வெளியீடாக வந்த 'பழநி ஆண்டவர்' என்ற மாத இதழிலும் ஈசுரமூர்த்தி பிள்ளை பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அவையும் தேவை.

யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி குமாரசாமி குருக்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'சைவ சாஸ்திர பரிபாலனம்' என்ற மாத இதழில், பிள்ளை அவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் இரண்டு கட்டுரைகள் மட்டுமே கிடைத்துள்ளன. அந்த இதழே இப்போது கிடைப்பதில்லை.

இவை குறித்து மேலதிக தகவல்கள் அறிந்தோர் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். இந்த ஆண்டின் (2019) இறுதிக்குள் பிள்ளையவர்களின் தனி கட்டுரைகளை மட்டுமாவது நூலாகத் தொகுத்து வெளியிடலாம் என்று நினைத்து இருக்கின்றேன். அன்பர்கள் உதவி பல்லாற்றானும் தேவை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate