மார்ச் 5ம் தேதி சென்னை ஐசிஎப்.பில் உள்ள கமல விநாயகர் சத்சங்கத்தில், வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகரின் குருபூசை விழா நடந்தது.
திரு. ஔியரசு ஐயாவின் சென்னை தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றமும், பவானி திரு. தியாகராசன் நடத்தி வரும் பவானி சிவனடியார் திருக்கூட்டமும் இணைந்து அந்நிகழ்வை நடத்தினர்.
‘நமப் பார்வதி பதயே’ என்று முழங்கினால் அந்த கோஷத்தை கேட்க தமது காதுகள் கூசுவதாகவும், ‘தென்னாடுடைய சிவனே’ என்று சொன்னால் தேன் வந்து பாய்வது போல இருக்கும் என்றும் பேசிக் கொண்டிருந்தார்.
சிறிதுநேரம் கழித்து, வேதமூர்த்தி அருணன் Vedamurthy Arunan ஐயா வந்து உடன் கலந்து கொண்டார்.
விழா நிகழ்வுகள் முடிந்த பின்னர், திரு. குமரலிங்கம், ஞானத்திரள் ஆசிரியர் திரு. சிவக்குமார், திரு. தியாகராசன், திரு. ஔியரசு ஆகிய நான்கு ஆளுமைகளையும் சந்தித்து, ‘சைவ சமயத்தில் மொழிப்போர்’ நுாலை இருவரும் வழங்கினோம்.
ஔியரசு ஐயா மட்டும் ஆ.ஈ. ஐயா பற்றி தான் அறிந்திருந்ததாக சில வார்த்தைகள் பேசினார்.
உண்மையில் இவர்களுக்கு அஞ்சல் மூலம் நுால்களை அனுப்பத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக நேரிலேயே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஔியரசு ஐயா ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்ததால் சிரமமின்றி என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
தமிழ்ச் சைவத்தைப் பரப்புவதில் முன்னிற்கும் இவர்களுக்கு இவர்களின் எதிர்த் தரப்பை வலியுறுத்தும் ‘சைவ சமயத்தில் மொழிப்போர்’ நுாலை வழங்கியதில் மகிழ்ச்சி.
![]() |
ஒளியரசு ஐயா உடன்... |
![]() |
'ஞானத்திரள்' இதழாசிரியர் கி. சிவக்குமார் உடன் வேதமூர்த்தி அருணன் |
![]() |
பவானி தியாகராசன் உடன் வேதமூர்த்தி அருணன் |
![]() |
குமரலிங்கம் உடன்... |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக