செவ்வாய், 4 ஏப்ரல், 2023

திருடு போன பிள்ளையார்

அது 1994 - 95 என நினைக்கிறேன். பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயில் அதன் பரம்பரை தர்மகர்த்தாவால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியிருந்தது. பிரம்மோற்சவம் முதல் எந்த திருவிழாவும் நடக்கவில்லை. சொத்துக்கள் இருந்தும் சொல்லிக் கொள்ளும்படி வருமானமில்லை. சிவராத்திரி முடிந்த மறுநாள். வழக்கம் போல் சாயரட்சை முடிந்ததும், நாங்கள்தான் குடவருவாயில் பெரியகதவு, நடுவில் உள்ள பெரிய கம்பிக்கதவு ஆகியவற்றை அடைத்துக் கொண்டிருந்தோம்.

சுப்பிரமணிய பட்டர் பதற்றத்துடன் ஓடிவந்தார். உற்சவர் வரிசையில் இருந்த பிள்ளையாரைக் காணவில்லை என்றார். சிந்தையும் உடலும் பதற்றத்துக்கு ஆளாகின. திக்திக் என நெஞ்சு அடித்துக் கொள்ள, உற்சவர் பக்கம் போய் பார்த்தபோது பிள்ளையாரைக் காணவில்லை. காவல்நிலையம், புகார் என பட்டர்தான் அலைந்து கொண்டிருந்தார். சில ஆண்டுகளில் அவரும் போய்ச் சேர்ந்தார்.

நெல்லை பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயிலில் இருந்து திருடு போன விநாயகர்

2000ம் ஆண்டில் பிரம்மோற்சவம் நடத்த நாங்கள் நண்பர்கள் திட்டமிட்டோம். முதலில் பிள்ளையார் வேண்டுமே...உரிய அனுமதி பெற்று புதிய பிள்ளையார் உற்சவத் திருமேனி செய்து வைத்தோம்.
ஆயிற்று...24 ஆண்டுகள்...காணாமல் போனவர் எங்கிருக்கிறாரோ...யாராவது பார்த்தால் சொல்லுங்கள்...பேட்டையில் சிலர் மட்டுமே அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று...

(முகநுாலில் 2018, செப்டம்பர் 13ம் தேதி எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate