செவ்வாய், 4 ஏப்ரல், 2023

ஆ.ஈ. நுால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு!

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்கள் எழுதிய 'சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்' என்ற நுாலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அன்பர் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அந்த முகம் தெரியாத அன்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள். கைம்மாறு கருதாமல் சைவ சமூகத்திற்கு அந்த அன்பர் செய்த பேருதவி இது.

அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை என் கவனத்திற்கு கொண்டு வந்த என் கெழுதகை நண்பர் திரு. ரவிசங்கர் https://www.facebook.com/bjravishankar அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆ.ஈ. ஐயாவின் முக்கியமான நுால்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இந்தத் தகவல் பேரூக்கம் தந்துள்ளது.

மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட தளத்தின் இணைப்பு சுட்டி:

https://newindian.activeboard.com/t65835015/sanskrit-mantras-in-all-saiva-temples/?page=1&fbclid=IwAR2n0P9yTsQi8ZprFdnQb1X7Gc5yO9u7ONHZyFzuJ-zvOi5snpRTi1hdSwQ

(ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை படைப்புலகம் என்ற முகநுால் பக்கத்தில், 2022, மார்ச் 7 ம் தேதி எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate