மார்ச் 5ம் தேதி சென்னை ஐசிஎப்.பில் உள்ள கமல விநாயகர் சத்சங்கத்தில், வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகரின் குருபூசை விழா நடந்தது.
நெல்லைச்சொக்கர்
செவ்வாய், 4 ஏப்ரல், 2023
தமிழ்ச் சைவத்தின் முக்கிய ஆளுமைகள் உடன்…
திரு. மு.பெ. சத்தியவேல்முருகனார் உடன்…
தமிழ்ச் சைவத்தின் முக்கியமான ஆளுமையாக இருப்பவர் திரு. மு.பெ. சத்தியவேல்முருகனார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் நடைமுறைக்கு வரப் பாடுபட்டவர். தமிழில் வழிபாடுகளோடு நிறுத்திவிடாமல், கும்பாபிஷேகம் வரைக்குமான நுால்களை உருவாக்கியவர். தனித்தமிழ் ஆர்வலர்.
ஆ.ஈ. நுால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு!
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்கள் எழுதிய 'சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்' என்ற நுாலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அன்பர் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அந்த முகம் தெரியாத அன்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள். கைம்மாறு கருதாமல் சைவ சமூகத்திற்கு அந்த அன்பர் செய்த பேருதவி இது.
சுயமரியாதை இயக்கச் சூறாவளியும் பிரான்ஸ் தமிழச்சியும்
கடந்த இரு மாதங்களாக பிரான்ஸ் தமிழச்சி என்பவர், திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் மீதும் அவ்வமைப்பு சார்ந்த நபர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தி வருகிறார்.
திருடு போன பிள்ளையார்
அது 1994 - 95 என நினைக்கிறேன். பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயில் அதன் பரம்பரை தர்மகர்த்தாவால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியிருந்தது. பிரம்மோற்சவம் முதல் எந்த திருவிழாவும் நடக்கவில்லை. சொத்துக்கள் இருந்தும் சொல்லிக் கொள்ளும்படி வருமானமில்லை. சிவராத்திரி முடிந்த மறுநாள். வழக்கம் போல் சாயரட்சை முடிந்ததும், நாங்கள்தான் குடவருவாயில் பெரியகதவு, நடுவில் உள்ள பெரிய கம்பிக்கதவு ஆகியவற்றை அடைத்துக் கொண்டிருந்தோம்.