சனி, 28 டிசம்பர், 2013

பகவான் புத்தர்- தர்மானந்த கோஸம்பி


நுால்: பகவான் புத்தர்
ஆசிரியர் (மராட்டியில்): தர்மானந்த கோஸம்பி
தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ
வெளியீடு: புத்தா வெளியீட்டகம், கோவை
தொடர்புக்கு: 0422 - 2576772, 94434 68758

சங்கரலிங்கம் அண்ணன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை:
நீ ஒரு நல்ல சமணனாக, பவுத்தனாக இல்லாமல் சைவனாக இருக்க முடியாது.
அவர் சொன்ன நேரத்தில் இவை எனக்குப் புரியவில்லை. இப்போது லேசாக புரிகிறது.

புதன், 18 டிசம்பர், 2013

முடிந்தது திருவாதிரை - கொட்டுச் சத்தம் கேட்கிறது


ஒருவழியாக, பால்வண்ணநாதர் கோயிலில்,  திருவாதிரை விழா  முடிந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கிய நீராட்டு, 5 மணிக்கு முடிந்தது. அலங்காரம், திருவெம்பாவை ஓதல், தீபாராதனை, பசுத் தீபாராதனை எல்லாம் நிறைவுற்று, முற்பகல் 11 மணிக்கு நடராஜர் வீதியுலா புறப்பட்டார்.

எட்டுத் திசைகளிலும், அவருக்கு திருவெம்பாவை ஓதப்பட்டது. இரு வீதிகளிலும் நிறைய திருக்கண் சார்த்தப்பட்டது.

கங்காள நாதர் -பிட்சாடனர் - அந்தகாசுர சம்ஹார மூர்த்தி - குழப்பம் ஏன்?


பேட்டை பால்வண்ணநாதர் கோயிலில், எட்டாம் திருநாள் மாலையில், கங்காளநாதர் வீதியுலா நடந்தது.

கங்காளநாதர், பிட்சாடனர், அந்தகாசுர சம்ஹார மூர்த்தி ஆகிய மூன்று வடிவங்களைப் பற்றியும் குழப்பம் நிலவுகிறது.

உண்மையில் மூன்றும் வேறுவேறு தான். தோற்றத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மார்கழி பஜனை - பேட்டையில் உற்சாகம்


2004 அல்லது 2005ம் ஆண்டு என நினைக்கிறேன், பேட்டையில், மார்கழி மாத பஜனையை ஆரம்பிக்கலாமே என, எனக்கு தோன்றிற்று.

1960-70களில், பேட்டையில் அப்போதிருந்த பெரியவர்கள் சிலர், பத்து பதினைந்து பேர், மார்கழி மாத பஜனையை நிகழ்த்தினர் என நான் கேள்விப்பட்டிருந்தேன். அவர்கள் என்ன பாடிச் சென்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை.

திங்கள், 16 டிசம்பர், 2013

மூன்று நிறங்கள் - ஒரு தத்துவம்


பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயிலில், நேற்று ஏழாம் திருநாள். காலை வழக்கம் போல், பூங்கோயில் வாகனங்களில், பஞ்சமூர்த்தி வீதியுலா.

மாலையில், சிவப்பு சார்த்தி கோலத்தில் நடராஜர் வீதியுலா. பால்வண்ணநாதர் கோயிலில் உள்ள கற்சிலைகளும், செம்புச் சிலைகளும் கண்ணைக் கவரும் அழகுடன் திகழ்பவை. ஒன்றுக்கொன்று சோடை போகாதவை.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மார்கழித் திருவாதிரையில் சமணர் கழுவேற்றம்


தற்போது  நான் எனது சொந்த ஊரான பேட்டையில் இருக்கிறேன். பால்வண்ணநாத சுவாமி கோயிலில், திருவாதிரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று ஆறாம் திருநாள். யானை வாகனம். அதோடு, ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுக்கும் விழாவும், சமணரைக் கழுவேற்றும் விழாவும்.

புதன், 11 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? - சுப்ரீம்கோர்ட் விவாதங்கள் - 3


பொது தீட்சிதர்களுக்கு வாதம் செய்ய, 5-12-13 அன்று பிற்பகலில் வாய்ப்பு தரப்பட்டது.

அவர்கள் சார்பில், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சி.எஸ்.வைத்தியநாதன், தற்போதைய சட்ட ஆணைய உறுப்பினர் கே.வெங்கட்ரமணி ஆகியோர் ஆஜராகினர்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் விவாதங்கள் - 2


3-12-13 அன்று, அரசிடம் இருந்து அறிவுறுத்தல் தெரிவிக்க கால அவகாசம் தேவைப்படும் என, அரசு வழக்கறிஞர் தெரிவித்ததால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணையைத் தொடர்ந்தனர்.

திங்கள், 9 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் விவாதங்கள் - 1


(சிதம்பரம் கோவிலை எப்படியாவது, தன் வசப்படுத்தி விட வேண்டும் என, தமிழக அரசும், அறநிலையத் துறையும் கங்கணம் கட்டி கொண்டிருக்கின்றன.

அதை முன்னிட்டு, தமிழ்த் தேசியம் பேசுவோர், முற்போக்குவாதிகள், நடுநிலையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என, அனைவரும், தில்லை தீட்சிதர்களைக் குறிவைத்து தாக்கத் துவங்கியுள்ளனர்.


ஞாயிறு, 1 டிசம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 5


8. சிவசன்மா தாரகையுலகமும் புதன் உலகமும் கண்ட அத்தியாயம் (15வது அத்தியாயம்) (கவி கூற்று)

1. வெய்ய கூற்றுருத் தெறிவேல் விலக்கினும்
எய்தும்ஊழ்வினைத் தொடர் எண்ணி மாற்றினும்
தையலார் முழுமதி முகத்தில் தயங்கிய
மையகண் காலவேல் மாற்றலாகுமே - 13

சனி, 30 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 4


7. சிவசன்மா வாயுவின் உலகமும் குபேரனுலகமும் கண்ட அத்தியாயம் (13வது  அத்தியாயம்)
(காசிபமுனி மகன் இறைவனை வழுத்தியது என, சிவசன்மாவிற்கு விஷ்ணு கணங்கள் உரைத்தது)

1. தண்ணங் கமலை கேள்வனுக்கும் தனிநான்முகற்கும் புரந்தரற்கும்
நண்ணற் கியைந்த பதங்கொடுக்கு நளிமாமதிச் செஞ்சடையினோய்
எண்ணற் கரிய மறைநான்கும் இதுவன்‌று இதுவன்று என்பதல்லாற்
கண்ணற் கரியாயென் போல்வார் எவ்வா றுன்னைக் கருதுவதே - 4

வெள்ளி, 29 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 3


6. சிவசன்மா தெய்வலோகங் கண்ட அத்தியாயம் (10வது அத்தியாயம்)

(பாடல் 45 முதல் 52 வரையிலானவை, விசுவாநரன், வீரேசுவரரைத் துதித்தது என, விஷ்ணுகணங்கள், சிவசன்மாவுக்கு உரைத்தது. இவை சிவாஷ்டகம் எனப்  பெயர் பெறும்)

அருவுருவாய் ஏகமாய் அக்குணங்குறிகள் எவையுமின்றி அசலமாகி
நிருமலமாய் எவ்வுயிர்‌க்கும் உயிராகிச் சுடரொளியாய் நித்தமாகிக்
கருதரிய ஆனந்தக் கடலாகிமெய்ஞ்ஞானக் கனியாய் நின்ற
வரதநின் அடிக்கமலம் மனத்திருத்தி கொழுமலர்துாய் வழுத்தல் செய்வாம் - 45

வியாழன், 28 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 2


5. தீர்த்த மகிமை உரைத்த அத்தியாயம் (ஆறாவது அத்தியாயம்)
(லோபாமுத்திரைக்கு அகத்தியர் உரைத்தது)

சத்தியந்தானஞ் சம்மதம் இன்சொற்சாற்றுதல் ஒருவழிப்படுதல்
புத்தியே முதல கரணமோர் நான்கும் அடங்குதல் புலன்கள்போம் வழியின்
உய்த்திடாதமைத்தல் பொறைதிட ஞானம் உயிர்க்கெலாம் தண்ணளி புரிதல்
இத்திறமனைத்தும் மானத  தீர்த்தம் என எடுத்தியம்பினர் மேலோர் -7

புதன், 27 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 1


(2001ல், அதிவீர ராமபாண்டியர் இயற்றிய காசி கண்டம் படித்தேன். முழுமையாக படிக்க முடியவில்லை. எனினும், படித்த வரையிலும், என் மனதில் பதிந்த சில பாடல்களை குறிப்பெடுத்தேன்.

அந்த பாடல்களில், ஆன்மிகமும், உலகியலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.


செவ்வாய், 26 நவம்பர், 2013

மறந்தாரா பெருமாள் முருகன்?


(இந்த சிறிய கட்டுரை, தி இந்து பத்திரிகையில் கடந்த அக்டோபர் 24ம் தேதி வெளியான, பாலும் அழுக்கும் என்ற தலைப்பில், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரைக்கு பதிலாக எழுதியது.

இதனை, ஓரிரு நாட்கள் கழித்து, தி இந்து, கட்டுரையின் கமென்ட் பகுதியில் பிரசுரித்தது.  நான் பதில் அனுப்பிய உடனே எனது முகநுால் கணக்கில் பிரசுரித்து விட்டேன்.

பார்க்க: பாலும் அழுக்கும்

இனி, எனது பதில்...)
------------------------------

திங்கள், 25 நவம்பர், 2013

நாம் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறோமா?


நுால்: காந்தியின் ஆடை தந்த விடுதலை
ஆசிரியர்: பீட்டர் கன்சால்வஸ்
தமிழில்: சாருகேசி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பக்கம்: 159
விலை: ரூ.75/-

8ம் வகுப்பு படிக்கும் போது, நான் காந்தியை வாசிக்க துவங்கினேன். பள்ளி விட்டு வந்ததும் எனது முதல் வேலை, நுாலகத்தில் இருந்து எடுத்து வந்த, தலையணை அளவுக்கு காட்சியளிக்கும், காந்தியின் நுால் தொகுப்பை எடுத்து விட்ட இடத்தில் இருந்து படிப்பது  தான்.

சனி, 23 நவம்பர், 2013

கம்பனைக் காட்டிய அ.ச.ஞா


நுால்: கம்பன்- புதிய பார்வை
ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
பக்கம்: 408
விலை: ரூ.100

தமிழை நேசிப்போர் ஒவ்வொருவரும், வாசிக்க வேண்டிய நுால்களுள், கம்ப ராமாயணமும் ஒன்று.

2000ங்களில், ஊரில் இருந்த போது, கம்பனை வாசிக்க வேண்டும் என்ற நினைப்பு எழுந்தது.


வெள்ளி, 22 நவம்பர், 2013

அற்புதப் பதிகங்கள் - உரையுடன்


நுால்: அற்புதப் பதிகங்கள்
உரையாசிரியர்: சித்தாந்த நன்மணி சிவஸ்ரீ இரத்நவேலன்
வெளியீடு: சைவ சித்தாந்த சபை, சங்கரன்கோவில், 
பக்கம்: 100
விலை: குறிப்பிடப்படவில்லை

நான், சிதம்பரத்தில், எனது ஆசிரியர் ரத்னவேலன் ஐயாவை 2000ல் முதன்முதலாக சந்தித்த  போது, அதிகளவில் கேட்ட கேள்விகள், சந்தேகங்கள் எல்லாம், தமிழ்நாட்டு சைவத்தில், தமிழ், வடமொழி பற்றிய வாதபிரதிவாதங்கள் குறித்துத் தான்.

வியாழன், 21 நவம்பர், 2013

திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள் - 2


11. பகவன் எனும் சொல்லாட்சி:

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுடன் ஆவரே

(2ம் திருமுறை - திருப்பூந்தராய் - இந்தளம் - 11வது பாடல்)

புதன், 20 நவம்பர், 2013

திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள் - 1


(நான், எனது சொந்த ஊரில் இருந்த போது, பெரும்பான்மையும் வேலைநேரங்களில், வேலை போக, ஓய்ந்திருக்கும் நேரங்களில், தேவாரம் முதலிய நுால்களை படிப்பது வழக்கம்.

அப்போது குறிப்புகளும் எடுப்பேன். தினசரி பாராயணத்திற்கு ஏற்ற நுால் தேவாரம். ஒவ்வொரு முறை ஓதும் போதும், அது ஒவ்வொரு  விதமான பொருளைக் கொடுக்கும்.


செவ்வாய், 19 நவம்பர், 2013

சச்சிதாநந்தம் - வ.உ.சிதம்பரம் பிள்ளை - (2ம் பகுதி)


நமது முன்னோர் தமது முன்னோர் கூறியவற்றைச் சரியென்றே கொள்ளும் சுபாவத்தைக் கொண்டிருந்தா ரென்பதும், தமது முன்னோர் கூறியவை சரியானவையா பிசகானவையா என்று விசாரிக்கும் சுபாவத்தைக் கொண்டிருக்கவில்லை யென்பதும் நம்மில் ஒரு சிலர் அறிந்தவையே.

நமது முன்னோர் கூறியுள்ளவற்றில் ஒன்று சரியானதா பிசகானதா என்று நம்மில் ஒருவர் விசாரிக்கப் புகின், அவரைப் புரட்சிக்காரரென்றும் ஆன்றோரை நிந்திப்பவரென்றும், ஆன்றோரினும் அறிவுடையவ ரென்ற பெயரைக் கொள்ளக் கருதுபவரென்றும் பலவாறாக நிந்திக்கின்றனர் நம்மிற் பலர்.

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - பொது


1. திருஞானசம்பந்தர் செய்யதிரு வடிபோற்றி
அருள்நாவுக் கரசர்பிரான் அலர்கமல பதம்போற்றி
கருமாள எமையாளுங் கண்ணுதலோன் வலிந்தாண்ட
பெருமாள்பூங் கழல்போற்றி பிறங்கியவன் பர்கள் போற்றி

-கோயிற்புராணம்

சச்சிதாநந்தம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை (முதல் பகுதி)


(2008ம் ஆண்டு என, நினைக்கிறேன். என் நண்பன் மாசானம், சென்னைக்கு அலுவல் விஷயமாக வந்திருந்தான். நான் அப்போது விஜயபாரதத்தில் பணியாற்றி வந்தேன்.

வந்தவனை நேரில் சந்தித்துப் பேசினேன்.  அப்போது வடபழனியில் உள்ள தனது உறவினரைப் பார்க்க செல்வதாகவும், அந்த வீட்டில் உள்ள ஒரு பெரியவர், வ.உ.சி.யை நேரில் பார்த்தவர் என்றும் கூறினான்.

திங்கள், 18 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - மாணிக்கவாசக சுவாமிகள்


1. ஊற்றிருந்தா னந்தவெள்ளம் ஒழுகவுளம் அனல்மெழுகா உருகு வோனை
நாற்றடந்தோட் சுந்தரர்மண் சுமந்திடமெய் அன்புகொண்ட நலத்தி னானைத்
தேற்றுதிரு வாசகமிவ் வுலகுய்யச் செப்பியசெவ் வாயுங் கொண்டு
தோற்றுபரா னந்தநடப் பொதுவினிற்சென் றிருந்தோனைத் துதித்து வாழ்வாம்

-துறைசைப் புராணம்

ஞாயிறு, 17 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - சுந்தரமூர்த்தி நாயனார்


1. மனைப்பாசம் அகற்றவென்று வந்துவழக் குரைத்தாண்ட வரதர் தம்மைத்
தினைப்போதிற் பரவையிடத் தெனைக் கூட்டும் எனத்துாது செலுத்தி வாழ்ந்து
வினைப்போகம் கடந்ததவ முனிவரெதிர் கொளக்கரிமேல் வெள்ளிவெற்பில்
பனைத்தாரோன் உடன்போன பாவலன்பொன் அடிக்கமலம் பரவுவாமே

-துறைசைப் புராணம்

சனி, 16 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - திருநாவுக்கரசு நாயனார்


1. கற்பெருந்துாண் புணையாகக் கடல்கடந்தை யாற்றில்எழிற் கயிலை கண்டு
பற்பணியின் விடந்தீர்த்தப் பூதிமக வுயிரளித்துப் பதிகச் சொல்லால்
பொற்புறுவே தாரணியக் கதவுதிறந் தருட்புகலுார்ப் பொருளிற் சேர்ந்த
அற்புதநா வுக்கரசன் அடியிணைப்பூ முடியிலுற அமைத்தல் செய்வாம்

-துறைசைப் புராணம்

வெள்ளி, 15 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்


(சைவ நுால்களை கற்ற ஆரம்ப நாட்களில் இருந்தே, எனக்கு தலபுராண இலக்கியத்தின் மீது தீராத காதல் இருந்து வருகிறது.

அவற்றின் படல அமைப்புகளும், கருத்து வெளிப்பாடும், சமய பிரசாரத்திற்கு ஏற்ற எளிமையும் என பல பரிமாணங்களில், தலபுராண இலக்கியங்கள், முக்கியத்துவம் பெறுகின்றன.

வியாழன், 14 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து...4

17-4-2000
திங்கள், சென்னை 

...இதற்கிடையில் பேட்டைக்குச் சென்று வந்தேன். ஆனந்தமயமான சூழ்நிலை. அமைதியான சுற்றுச்சூழல். இதுபோன்ற அமைதி சென்னை நகரத்திலும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. பரிபூர்ணமாக அனுபவிக்க இயலவில்லை.

....கடந்த செவ்வாயன்று, பேட்டைக்குச் சென்றவுடன் எனது பெற்றோர் எனக்குக் கூறிய உடனடிச் செய்திகளுள் ஜங்ஷன் தருமை மடத்தில் யாரோ சாமியார் ஒருவர் வந்திருக்கிறார்; ஜடாமுடிகளை ஏற்றிக் கட்டியிருக்கிறார் என்பதும் ஒன்று.

புதன், 13 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து...3

18-3-99
வியாழன்

இன்று சைவசித்தாந்த வகுப்பு நடைபெற்றது. சென்ற மாதத்தில், முக்கால் நாட்கள், அடியார்கள் அட்டசோதிலிங்கத் தலங்களுக்கு யாத்திரை சென்றதால், சென்ற மாத வகுப்பு, இம்மாதம், இன்று வைக்கப் பெற்றது. 

இன்று வகுப்பு மிக அருமையாக நடைபெற்றது. ...நேற்று முதல் நாள் செவ்வாயன்று, மாத  சிவராத்திரி அபிஷேகம் (இந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது) (முந்திய அடைப்புக்குறிக்குள் இருப்பது, நாட்குறிப்பில் இருப்பது தான். அனேகமாக அது நெல்லையப்பர் கோயிலில் என, நினைக்கிறேன்) நடந்தது.

செவ்வாய், 12 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து...2

10-3-99
புதன், பேட்டை

'வடமொழியும் தென்தமிழும் ஆனான்காண்'
'தமிழ்சொலும் வடசொலும் தாணிழற்சேர'

என, சமயக்குரவர்கள் கூறியிருப்பதை அறிந்தும் தெளிந்தும் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனர் சில ஆதர்கள்.

சமற்கிருதத்தை எதிர்ப்பதன் மூலம் அல்லது அதை இல்லாது செய்துவிடுவதன் மூலம் தமிழ் வளரப்போவதில்லை.

திங்கள், 11 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து....1


(விடுப்பில், எனது சொந்த ஊருக்கு வந்துள்ள நான், இன்று, எனது, புத்தகப் பெட்டிகளை எடுத்து சுத்தம் செய்து, எலியாரின் 'கைங்கரியங்களை' அகற்றி விட்டு, மீண்டும் புத்தகப் பெட்டிகளை ஒழுங்குபடுத்தினேன்.

அப்போது, எனது நாட்குறிப்பு டைரி  என் கண்ணில் பட்டது.

1999ல் நான் எனது சொந்த ஊரில் இருந்த போது, சைவம் தொடர்பாக, நிறைய படித்தேன். திருமலை மில்ஸ் நிறுவனத்தின், முதலாளிகளில் ஒருவரான திருஞான சம்பந்தத்தின் உதவியுடன், திருவாவடுதுறை ஆதீனத்தின், சைவ சித்தாந்த வகுப்பிலும்சேர்ந்தேன்.

சனி, 15 ஜூன், 2013

ஆறுமுக நாவலரின் தினசரி நியமங்கள்


(நான் 2000ல் திருநெல்வேலியில் இருந்த போது, டவுன் கீழரத வீதியில் உள்ள சிவஞான முனிவர் நுாலகத்திற்கு வாரத்தில் ஐந்து நாளாவது செல்வேன். அங்கு நுால்களை படித்த போது குறிப்பெடுத்திருந்தேன்.

அப்படி, 2001, ஜூலை 11ம் தேதி எடுத்த குறிப்பு தான் இது. `சித்தாந்தம்' இதழ்  தொகுப்பில் மலர் 8ல் இந்த விஷயம் அச்சிடப்பட்டிருந்தது

சனி, 27 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 8)


5 & 6 இரு மாயை

மேல் கன்மம் கூறியவிடத்து மாயைப் புணர்ச்சி எனக் குறிப்பிட்டது சுத்தமாயா, அசுத்தமாயா காரியங்களையாம். அவை தனு, கரணம், புவனம், போகம் என நால்வகையாய் வரும். மாயை என ஒன்றாகக் கூறியிருப்ப, இரண்டாகக் கூறுவது பொருந்துமோ எனின்

"சுத்தமு மசுத்தமு மெனப் படுங் கொடுமாயை' (அமுதா. பிள்ளை. -  98)

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 7)


3.  இருள்

இருளாவது ஆணவமலம். இவ்வாணவமலத்தை உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள் இருளென்றே திருவருட்பயனில் ஆள்கிறார்கள். இருள் எல்லாப் பொருள்களும் தம் வித்தியாசங்கள் தோன்றாமல் ஒரே பொருள் போலிருக்கும்படி மறைத்து நிற்கும்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 6)


2. அநேகன்

"ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க' என்று மணிவாசகப் பெருமான் அருளியதனை அறியார்  இரார். ஏகன் போலவே அநேகன் என்பதும் இறைவன் பெயர் மாத்திரையாய் அவ்வடியில் வருகின்றது. ஏகன் என்பதற்கு எதிர்ப்பதமே அநேகன் என்பதாகும். சொல்லால் ஒருமையாய் நிற்பதால் அஃது இறைவனுக்கு ஆயிற்று.

புதன், 24 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 5)

1. இ. தடத்த நிலை

தடத்தம் என்பது பக்கத்தில் உள்ளதில் இருப்பது என்னும் பொருளை உணர்த்தும். "ஒரு பொருளை அறிவிக்க விரும்புவோர் அப்பொருளை நேரே சுட்டாமல், அதற்கடுத்து உள்ளதொரு பொருளைச் சுட்டிக்காட்டி, குறித்த பொருளைப் பொதுவாக உணர வைப்பது தடத்தலக்கணம் எனப்படும்' எனச் சிவஞானபாடியத் திறவு (பக்.8) என்னும் நூல் தடத்தலக்கணம் பற்றிக் கூறுவது காண்க.


செவ்வாய், 23 ஏப்ரல், 2013

திங்கள், 22 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 3)


1. அ.ஏகன்

மாதவச் சிவஞான யோகிகள் ஆக்கிய 13 சிற்றிலக்கியங்களுக்கும் பாட்டுடைத் தலைவராவார்  சிவபிரான், உமாதேவியார், விநாயகப் பெருமானார், நமச்சிவாய மூர்த்திகள் என்னும் நால்வருமேயாவார்.

சனி, 20 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 2)


தத்துவம்  சொற்பொருள் விளக்கம்

தத்துவம் என்பது வடசொல். அச்சொல்லுக்கு உண்மை என்பது பொருளாம்.1. தத்துவம் என்பதற்கு மெய்யுணர்வு என்று மொழிபெயர்த்து இப்பல்கலைக்கழகத்தார் அமைத்துக் கொண்டதும் காண்க. மெய் உண்மை. மெய்யுணர்தல் என்ற திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குப் பரிமேலழகர் "அஃதாவது பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களா னன்றி உண்மையான் உணர்தல்; இதனை  வடநூலார் "தத்துவ ஞானம்' என்ப' என்றுரைத்தார்.2. அதனால் மெய்யுணர்தல் என்பது உண்மையான் உணர்தல் என்றாயிற்று. ஆண்டுத்  தத்துவம்  என்பதற்கு உண்மை என்ற பொருள் வந்தமை  தெரிகிறது. தத்துவ ஞானமுடையோன் தத்துவ ஞானி. தத்துவஞானியாவான் இவன் என்பதை,


சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 1)


விடிந்தால் மாதவ சிவஞான சுவாமிகள் குருபூஜை. சித்திரை ஆயில்யம். இதுவே திருநெல்வேலியில் இருந்திருந்தால், சிவநெறிக்  கழகம் சார்பில் ஏதேனும் வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கலாம். பொருள் தேடும் போதே அருளையும் தேடுவது சாலச் சிரமம் தான்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

கயிலாய வாகனத்தில் மருந்தீசர்

திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில், ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி  பெருவிழாவில், கொடியிறக்கத்திற்கு மறுநாள், கயிலாய வாகனத்தில் சந்திரசேகரர், பவானி வீதியுலா கோலாகலமாக நடக்கும்.

இந்தாண்டும் அதேபோல் நடந்தது.  திருவான்மியூர் கயிலாய வாகனம் வித்தியாசமானது. பொதுவாக சிவாலயங்களில், ராவணன் வீணை வாசிப்பது போலவும், அவனது பின்னணியில் கயிலாயம் இருப்பது போலவும் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்


இந்த திருவாசகத்துக்கு இலக்கியமாக திகழ்பவர் திருவான்மியூர் தியாகராஜா தான். இந்த வருடம் மயிலாப்பூரிலும் திருவான்மியூரிலும் ஒரே நாளில் பங்குனி திருவிழா தொடங்கியது.

மற்ற கோயில்களுக்கு இல்லாத சிறப்பு, திருவான்மியூருக்கு உண்டு. இங்கு திருவிழாவில் சந்திரசேகரர் தான்  வீதியுலாவுக்கு வருவார்.

சனி, 13 ஏப்ரல், 2013

மயிலை பங்குனி பெருவிழாவின் அற்புத காட்சிகள்


கடந்த 17-03-2013 முதல் 28-03-2013 வரை மயிலாப்பூர் கபாலீச்சரத்தில், பங்குனி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடந்தாண்டு அதே பங்குனி பெருவிழாவில், நான் நிருபராக இருந்ததால், தினசரியும் பங்கேற்றேன். அது தொடர்பான எனது கட்டுரைகள், தினசரி, "தினமலர்' நாளிதழில் வெளிவந்தன.

திங்கள், 1 ஏப்ரல், 2013

கார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அனுபவம்


கும்பமேளாவிற்கு என்னுடன் அலகாபாத்திற்கு வந்த தினமலர் நாளிதழ் வரைகலை நிபுணர் கார்த்திகேயன், தான் ஒரு புகைப்பட கலைஞரும் கூட என்பதை நிரூபித்தார். அவரது புகைப்படங்களை பார்க்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பார்த்து மகிழலாம்.

கார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அனுபவம்

சனி, 30 மார்ச், 2013

ஓட்டளியுங்கள்


கும்பமேளாவில் பங்கேற்க நான், தினமலர் நாளிதழ் வரைகலை நிபுணர் கார்த்திகேயன், புகைப்பட கலைஞர் சத்திய சீலன் மூவரும் சென்றோம். தொடர்ந்து டில்லியில் இரண்டு நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.

அங்கு குதுப்மினார் சென்று பார்த்து விட்டு, அந்த வளாகத்தில் உள்ள இல்டுமிஷ் சமாதி அருகில் புல் தரையில் அமர்ந்திருந்தோம்.


வெள்ளி, 29 மார்ச், 2013

சூரிய வட்டத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா


(கபாலீஸ்வரர் கோவிலின் இந்தாண்டு பங்குனி பெருவிழாவையொட்டி நான் எழுதி வெளியான செய்தி)

(மார்ச் 20, 2013)

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று காலையில் சூரிய வட்ட வாகன வீதி உலாவும், இரவில் சந்திர வட்ட வாகன வீதியுலாவும் நடந்தன.

வியாழன், 28 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 6


சமோசா, பூரி, ஜிலேபி, சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை

(பிப்ரவரி 28, 2013)

அலகாபாத்தில் கும்பமேளாவில் கலந்து கொள்ள, லட்சக்கணக்கான பேர் தினசரி அங்கு கூடும் நிலையில், சாதாரண குடிநீர் பாட்டில் முதல், உணவு வரை அனைத்து பொருட்களும், ஓரளவு நியாயமான விலைக்கே கிடைக்கின்றன.

ஒருவர் ஒருவேளை சாப்பாட்டை, 20 ரூபாயில் முடித்துக் கொண்டு விடலாம் என்பது ஆச்சரியமான செய்தி.

புதன், 27 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 5


கங்கையில் புனித நீராடுவதில் மகிழும் தமிழர்கள்

(பிப்ரவரி 27, 2013)

உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதில், தமிழகத்தில் இருந்து மட்டும், 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

அலகாபாத்தின் மோரி பகுதியில் உள்ள சிவமடம், நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரம் ஆகிய இரு இடங்களிலும், தமிழர்கள் பெருமளவில் தங்குகின்றனர்.

செவ்வாய், 26 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 4

நாடு முழுதும் 7 லட்சம் நாகா சாதுக்கள்:
 ஸ்ரீதிகம்பர் சிவராஜ் கிரி சாது தகவல்

(பிப்ரவரி 26, 2013)

கும்பமேளா என்ற உடனே, நாகா சாதுக்கள் என்ற அகோரிகள் தான் நினைவுக்கு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு விதங்களில் இவர்களை பற்றிய செய்திகள், சமுதாயத்தின் அடிமட்டம் வரை சென்றிருக்கின்றன. இவர்கள் மொத்தம், 7 லட்சம் பேர் உள்ளனர்.

திங்கள், 25 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 3


3 கோடி பக்தர்கள் கங்கையில் புனித நீராடல்
பாகுபாடின்றி மக்கள் சங்கமித்தனர்
(பிப்ரவரி 11, 2013)

உ.பி., மாநிலம் அலகாபாத்தில், தை அமாவாசை புனித நீராடலில், 3 கோடி மக்கள் பங்கேற்றனர். அதிகாலையில், ஆயிரக்கணக்கான நாகா சாதுக்கள், கங்கையில் நீராடி அணிவகுப்பாக நடந்து சென்ற காட்சி, மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

உ.பி., மாநிலம் அலகாபாத், பிரயாகையில் கடந்த, ஜன., 14ம் தேதி துவங்கிய கும்பமேளா, வரும் மார்ச், 10ம் தேதி வரை நடக்கிறது.கும்பமேளாவின் உச்சக்கட்டமான, தை அமாவாசை நீராடல், நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஞாயிறு, 24 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 2


மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது கங்கை கரை
 இரண்டு நாட்களில் 1 கோடி பேர் வருகை

(பிப்ரவரி 09, 2013)

 கும்பமேளாவின் உச்சகட்ட தினமான, தை அமாவாசை நீராடலில் பங்கேற்பதற்காக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும், அலகாபாத்திற்கு, ஒரு கோடி பேர் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உ.பி., மாநிலம் அலகாபாத் பிரயாகையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா, இந்தாண்டு, ஜன., 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

சனி, 23 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 1


தினமலர் நாளிதழின் இணை ஆசிரியரின் அனுமதியின் பேரில், நான், என்னுடன் பணியாற்றும் கிராபிக்ஸ் டிசைனர் கார்த்திக், புகைப்பட கலைஞர் சத்திய சீலன் மூவரும் கும்பமேளாவில் பங்கேற்க அலஹாபாத் சென்றோம்.

அந்த அனுபவங்களை தனித்தனியாக பதிவிடுவேன்.அதற்கு முன்பாக தினமலர் நாளிதழில் கும்பமேளா தொடர்பாக வெளிவந்த எனது செய்திகளை இங்கே அடுத்தடுத்து பதிவிடுகிறேன்.

Translate