வெள்ளி, 31 ஜனவரி, 2014

சம்பந்தரும் சமணரும்


ஞானசம்பந்தர் தேவாரம், வரலாற்று தகவல்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். நான் அதைப் பாராயணம் செய்யும் போதெல்லாம், புதிய புதிய கருத்துக்கள் தோன்றும்.

அதை அவ்வப்போது குறிப்பதும் உண்டு. அப்படி குறித்தவற்றை, நான் திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள்  என்ற தலைப்பில், இரண்டு பதிவுகளாக, இங்கே இட்டிருக்கிறேன்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஒரே இடத்தில் சைவ நுால்கள் கிடைக்குமா? – புத்தக கண்காட்சியை முன்னிட்டு ஒரு விவாதம்


தமிழில் மிகவும் இத்துப் போன துறை எது என்று கேட்டால் அது தத்துவம் தான்.

இன்று வேலைக்கு ஆகாத துறைகளுக்குள் போய், காலம் செலவழிக்க யாரும் தயாராக இல்லை.

அதனால், தத்துவம், சமயம், இலக்கியம், தமிழ் போன்றவை புறக்கணிக்கப்படுகின்றன.

வியாழன், 23 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 4


நேற்று அலுவலகத்திற்கு சென்று சில வேலைகளை முடித்துவிட்டு, மீண்டும் புத்தக கண்காட்சிக்கு நண்பர் கார்த்தியுடன் புறப்பட்டேன்.

இந்த முறை வாங்க வேண்டும் என, துணை ஆசிரியரிடம் நான் பரிந்துரைத்தது, எட்கர் தர்ஸ்டனுடைய தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், ஏழு தொகுதிகள்.

புதன், 22 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 3


20ம் தேதி விடுப்பாக இருந்ததால், அன்று மாலை 4:20க்கு மேல் புறப்பட்டு, புத்தக கண்காட்சிக்குச் சென்றேன்.

இந்த முறை, நான் சென்ற நாட்கள் எல்லாமே கொஞ்சம் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது.

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 2


18ம் தேதி சனிக்கிழமை, இரவு, இரண்டாவது முறையாக, புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அலுவலகத்தில் இருந்து சென்று வரவே நேரம் சரியாக இருந்தது.

கண்காட்சியிலோ புயல் வேகத்தில், அரங்குகளை கடக்க வேண்டியிருந்தது. என்னைக் கூட்டிக் கொண்டு வந்த நண்பர் அ.ப.ராசா, அநியாயத்திற்கு விரட்டிக் கொண்டிருந்தார். கவிஞர் முருகேஷ் மற்றும் அ.வெண்ணிலா ஆகியோரின் அறிமுகம்  கிடைத்தது.

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 1


கடந்த 10ம் தேதி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் துவங்கிய, சென்னை புத்தக கண்காட்சியில், 14ம் தேதி பொங்கல் அன்று முதன்முறை சென்று சில புத்தகங்கள் வாங்கினேன்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு - தினமலர் செய்தி


(சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், சுப்ரீம்  கோர்ட் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து, `தினமலர்' இன்று முழுமையான செய்தியாக வெளியிட்டுள்ளது. அதை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.)

http://www.dinamalar.com/news_detail.asp?id=890197

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கின் தீர்ப்பு - முழுவிவரம் (ஆங்கிலத்தில்)


(சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில்,  சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பின் முழு விவரத்தையும் இங்கே  ஆங்கிலத்தில் அளித்துள்ளேன். இது என் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

விரைவில், எனது வலைப்பூவில் இதை தமிழில்  மொழிபெயர்த்து வெளியிடுவேன்)

சனி, 4 ஜனவரி, 2014

சிவபூஜை சுந்தரம் பிள்ளை - நிறைவளர் நெஞ்சினர்


இன்று (3-1-14) காலை அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, அலைபேசியில், பேட்டை கண்ணனின் தவறிய அழைப்பு கண்ணில் பட்டது. அலுவலகத்திற்குச் சென்ற பின் பேசலாம் என்றெண்ணி, புறப்பட்டேன்.

அலுவலகம் சென்ற பின், வேலைகளில் மூழ்கினேன். பின், மதியத்திற்கு மேல் மீண்டும் அவரே அழைத்தார்.

Translate