ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

உள்ளங்கவர் பெரியாழ்வார் – 3


பெரியாழ்வார் பாடிய, செங்கீரைப் பருவத்தின் சந்தமே, குழந்தை ஆடுவது போன்ற சந்தம் தான்.

பெருமாளின் துாக்கம், நம்போலிகளின் துாக்கம் அல்ல; அது யோக துாக்கம் என்பதை, ‘பைய யோகு துயில் கொண்ட பரம்பரன்’ என்று விளக்கி விடுகிறார்.

புதன், 23 ஏப்ரல், 2014

உள்ளங்கவர் பெரியாழ்வார் – 2

தேவாரத்தில் ஒரு பாதாதிகேச வர்ணனை இருப்பதாக சொன்னனேன் அல்லவா?

தில்லைக்கு சென்ற அப்பரடிகள், கூத்தபிரானை கண்டு உள்ளமுருகி பாடியருளிய பண்ணமைந்த பதிகங்களுள் ஒன்று, ‘பாளையுடைக் கமுகு ஓங்கி’

அந்த பதிகத்தில், திருவடி முதல் திருமுடி வரை, ஆடல்வல்லானை காண்பித்திருப்பார் அப்பரடிகள்.

உள்ளங்கவர் பெரியாழ்வார் – 1

நான் இதுவரை திவ்ய பிரபந்தத்தை முழுமையாக படித்ததில்லை. அவ்வப்போது சில பாடல்களை வாசித்ததுண்டு. சில பாடல்களை, பாம்பன் சுவாமிகளின் ‘சைவ சமய சரபம்’ என்ற நுால் வழியாக அறிந்ததும் உண்டு. 

ஆனால், கடந்த இரு நாட்களாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் புண்ணியத்தில், பெரியாழ்வார் திருமொழியை வாசித்து வருகிறேன்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

அவசியமாக படியுங்கள் இந்த கட்டுரைகளை...


ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர், டி.ஆர்.ரமேஷ், ‘தினமலர்’ நாளிதழின், ‘தேர்தல் களம்’ என்ற இணைப்பில்,  இந்து சமய அறநிலைய துறை தொடர்பாக, ஐந்து கட்டுரைகள் எழுதி உள்ளார்.

(trramesh@mac.com  என்ற மின்னஞ்சலில் டி.ஆர்.ரமேஷை தொடர்பு கொள்ளலாம்)

இந்து சமய அறநிலைய துறை, கோவில்களில் அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது. அதில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு, கோவில் பற்றியோ, அதன் அருமை பெருமை பற்றியோ ஒன்றும் தெரியாது.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

குடம் குடமாக அபிஷேகம் தேவையா?


பக்தி, காலம்தோறும் வெவ்வேறு புரிதல்களுடன் மக்களால் எடுத்துச் செல்லப்படுகிறது.

நாயன்மார்கள் காலத்தில், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை அணுக உதவியாக இருந்த பக்தி, அதையடுத்து, தர்க்கத்தை கட்டியமைப்பதற்கும் உதவியாக இருந்தது.

அதனால் தான், `அன்பரொடு மரீஇ ஆலயந்தானும் அரனெனத் தொழுமே` என, பக்திக்கு, சாத்திரமும் முக்கியத்துவம் கொடுத்தது.

Translate