ஞாயிறு, 26 ஜூன், 2011

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -3

உழவாரப் பணி என்றால் என்ன? 

கி.பி.,6ம் நூற்றாண்டில், தமிழகத்தை, மகேந்திர வர்ம பல்லவ மன்னனும், நின்ற சீர் நெடுமாற பாண்டியனும் ஆண்ட காலத்தில் தோன்றியவர் தான் அப்பர் அடிகள் என்ற திருநாவுக்கரசு நாயனார். இவர் சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்து பின் திருவருளால் சைவ சமயத்திற்கு வந்தார்.

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -2

இன்றைக்கும் கோயில்கள் தேவையா? 


ஆம். இன்றைக்குத் தான் கோயில்கள் அவசியம் தேவை. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பயங்கரவாதம் ஏதாவது ஒரு வடிவில் புகுந்திருக்கிறது. மனிதர்களுக்குள் பரஸ்பரம் அன்பு குறைந்து, பணத்தின் மீதான வெறி அதிகரித்துள்ளது.

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -1

கோயில் என்றால் என்ன? 


தமிழில் "கோ' என்றால் இறைவன் என்று பொருள்;"இல்' என்றால் வீடு.இறைவன் எழுந்தருளியுள்ள இடம் தான் கோயில். 


உழவாரப் பணி ஏன் செய்ய வேண்டும்?

நம் உடலும் உள்ளமும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. ஒன்றில்லாமல் ஒன்று இயங்க முடியாது. அதேபோல், நம் கலாசாரமும் நம் மதமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்குகின்றன. வெளிநாடுகளில் இதன் நிலை மாறுபாடானது.

செவ்வாய், 10 மே, 2011

சிவஞானபோத மாபாடியம் - அச்சான கதை

(கடந்த 2000ம் ஆண்டில் முதன் முறையாக என் ஆசிரியர் ரத்னவேலன் ஐயாவை, சிதம்பரத்தில் வைத்துப் பார்த்தேன்.

அன்று மார்கழித் தேரோட்டம். அச்சமயம் நான் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். மார்கழித் திருவாதிரைக்காக, விடுமுறை எடுத்துக் கொண்டு சிதம்பரம் வந்து விட்டேன்.

மாதவச் சிவஞான சுவாமிகள் வரலாறு

(இக்கட்டுரை, சுவாமிநாத பண்டிதர் அச்சிட்ட, சிவஞானபோத மாபாடியமும், சிற்றுரையும் என்ற நூலில் உரையாசிரியர் வரலாறு என்ற பெயரில் இருந்தது.

இன்று சுவாமிகளின் குருபூசை. இணையத்தில் அவரது வரலாறு தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் சுவாமிநாத பண்டிதரின் நூலில் இருந்த சுவாமிகளின் வரலாற்றை இங்குப் பதிவிடுகின்றேன்.)

ஞாயிறு, 8 மே, 2011

தேவ குருவும் லோக குருவும்

(கடந்த வியாழக்கிழமை அன்று (5ம் தேதி) வீட்டில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் இருந்த புத்தகங்களில் முக்கியமானவற்றை வெளியில் எடுத்து வைத்து விட்டு, வெளியில் உள்ள படித்த, இப்போதைக்குப் படிக்க இயலாத புத்தகங்களை பெட்டிகளில் வைக்கலாமே என்று திடீர் ஞானோதயம் உதித்து, அப்படியே செய்தேன்.

ஞாயிறு, 1 மே, 2011

பெரியபுராணமும் சாதியும் - 3

(இறுதிப்பகுதி...)

                                                 வணக்கம்

இவ்வாறு குறிப்பதுடன், திருநாளைப் போவாரை (பறையரை)த் தில்லை அந்தணரும், சம்பந்தரை, நீலநக்கரை அப்பரும், நீலகண்டப் பாணரைச் சம்பந்தரும் வணங்கிய தன்மையைக் கூறிய பெரியபுராணம், அடியவர் போல் தோன்றிய ஏகாலியரைச் சேரமான் பெருமாள் படியுற வணங்கிய பரிசும் கூறுகிறது.

சனி, 30 ஏப்ரல், 2011

பெரியபுராணமும் சாதியும் - 2

(தொடர்ச்சி...)

நம்பி ஆரூரர், திருத்தொண்டத் தொகையைத் திருவாரூர்ச் சிவக்கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும், நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் அந்தாதியை நாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் உணர்த்தப் பாடினார் என்பதும், சேக்கிழார், பெரியபுராணத்தைத் தில்லைக் கூத்துடைக் கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும் சைவ உலகக் கொள்கைகள்.

பெரியபுராணமும் சாதியும் - 1 - காருடை சு.சூரியமூர்த்தி பிள்ளை

பண்டிதர் பேருரை  கட்டுரையின் இறுதிப் பகுதிக்காக, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குச் சென்று, பழைய "சித்தாந்தம்' இதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்த கட்டுரை இது.

திங்கள், 25 ஏப்ரல், 2011

சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்துக்கு

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பா.ராகவன் எழுதி கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 3

(இறுதிப் பகுதி)

                                                   சைவன்

இனிச் சைவன் என்பவன் சைவ ஒழுக்கம் பூண்டு நடப்பவன் என்பது யாவரும் ஒப்புவர். இதனைச் சாதியோடு பொருத்தியதனால் வரும் சண்டைகள் யாவும் சிறிது ஊன்றிப் பார்க்க ஒழிந்து போம். இவற்றின் விவரம் மேலே சைவத்தைப் பற்றிய பேச்சில் சொல்லியுள்ளேன்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 2

(தொடர்ச்சி...)

இனி இந்தச் சைவமானது எங்கே இருக்கின்றது என்று சில பேசுவோம். சைவம் என்பது ஒரு சாதிப் பெயராக அநேகர் எண்ணி வழங்குகிறார். 


உலக வழக்கில் அது சாதிப் பெயராய் வழங்கி வருதலும் உண்மையே. ஆனால் அதனைச் சமயக் கொள்கையின் பெயராகவே மேலே விவரணத்தில் எடுத்துக் கூறினோம். சாதிச் சைவம் வேறு; சமயச் சைவம் வேறு.

சனி, 23 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 1 - சி.கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., எப்.எம்.யு.,

(இக்கட்டுரை, சித்தாந்தம் இதழில், 1931, நவம்பர் மாதம் வெளிவந்தது. திருநெல்வேலி சிவஞான முனிவர் நூல் நிலையத்தில் இருந்து நான் பிரதி எடுத்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 4

(இறுதிப் பகுதி)

அன்புடையீர்! காட்டேரி, மாரி முதலியவற்றைக் கும்பிடாதீர்கள். அதனால் உங்கள் பத்தி கெடும். அத்தேவதைகளே வந்து கேட்டால் உணவு கொடுங்கள். நீங்களாக வரவழையாதீர்கள்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 3

 (தொடர்ச்சி...)

இங்கு ஒரு சிறிது சைவ சமய குரவர் பெருமையைக் குறிக்கக் கடவேன்.

அவர்கள் தெய்வ மகிமை பெற்று விளங்குவோர் ஆவர். வடமொழியில் பல ஆசிரியன்மார்கள் நூல்கள் உள. ஆனால் அவை எல்லாம் அவ்வம் முனிவர்கள் அருளிய மொழிகளே என்பதற்குச் சான்றில்லை. அன்றியும் அவை மிகவும் பண்டையன.

சனி, 16 ஏப்ரல், 2011

சைவ மகிமை - 2

(தொடர்ச்சி...)

சிவம் என்பது அந்வய நாமம். முத்திக்குச் சிவம் என்னும் பேர் உண்டு. எனவே முத்தி விரும்புவோர் எல்லாம் சைவர் என்று கோடல் கூடும்.

சிவத்திற்குத் தடத்த லட்சணம் எனவும் சொரூப லட்சணம் எனவும் இரண்டு லட்சணம் உண்டு. இவற்றுள் தடத்த லட்சணச் சார்பாக மட்டும் இங்குச் சில விவகரிப்பேன்.

சைவ மகிமை -1

(இந்த அரிய கட்டுரை, 1931, நவம்பர் மாதம் சித்தாந்தம் இதழில் வெளிவந்தது. பாம்பன் சுவாமிகளின் சொற்பொழிவுதான் இக்கட்டுரை. இதில் பல அரிய கருத்துக்களை சுவாமிகள் கூறியுள்ளார். சைவர் யார்? என்பதில் தொடங்கி, சைவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சில கடமைகள் வரை மிக அற்புதமாக விவரித்துக் கொண்டு போகிறார்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

வைதிக சைவர்கள் அநேக ஈச்சுர வாதிகளா? - 2 (இந்து சாதனப் பிரசுரம்)

(இப்பகுதியில், நாட்டுப்புறத் தெய்வங்களைப் பற்றி சில கருத்துக்களைக் கூறுகிறார் கட்டுரை ஆசிரியர். இக்கருத்துக்கள் ஆறுமுக நாவலர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

வைதிக சைவர்கள் அநேக ஈச்சுர வாதிகளா? - 1 (இந்துசாதனப் பிரசுரம்)

(இலங்கையில் இருந்து வெளிவரும் "இந்து சாதனம்' என்ற இதழில்,  19ம் நுõற்றாண்டின் இறுதியில் அல்லது 20ம் நுõற்றாண்டின் ஆரம்பத்தில் (ஆண்டு சரியாகத் தெரியவில்லை) வெளிவந்த கட்டுரை இது.  அக்காலத்தில் சென்னையில் இருந்து வெளிவந்த "சைவம்' இதழில் மீண்டும் இது மறுபிரசுரம் செய்யப்பட்டது.

புதன், 6 ஏப்ரல், 2011

மதமாற்றத்தை எதிர்க்கும் மலாக்கா செட்டிகள்

மலேசியாவின் மூன்றாவது சிறிய மாநிலமான மலாக்கா மாநிலத் தலைநகரான மலாக்கா நகரின் ஒரு பகுதியான "கஜபெராவ்' (காஞ்சிபுரம்) என்ற இடத்தில், இன்று 100 மலாக்கா செட்டிக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பண்டிதர் பேருரை - 4

(இப்பகுதியில் மாணிக்கவாசகர் புத்தரோடு வாது செய்தது சிவபிரானது ஆணையின்படியே என்று காட்டுகிறார் சுவாமிநாதர்.

சுவாமிநாத பண்டிதரின் பேருரை இப்பகுதியுடன் நிறைவடைகிறது. ஆனால் இதன் கடைசி இரு பத்திகள் மட்டும் என்னிடம் இல்லாமல் போயின.

பண்டிதர் பேருரை - 3

(எல்லாச் சமயங்களையும் உருவாக்கியவன் சிவபிரான் எனில், சைவர்கள் பிற சமயங்களை ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்ற கேள்விக்கு இப்பகுதியில் பதில் தருகிறார் சுவாமி நாதர்.

பண்டிதர் பேருரை - 2

(இப்பகுதியில், இவ்வுலகில் பல்வேறு மதங்கள் ஏன் தோன்றின? அவை எல்லாம் சமமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சுவாமிநாத பண்டிதர்.

பண்டிதர் பேருரை - 1

(எனது சொந்த ஊரான திருநெல்வேலி பேட்டையில், கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், திருஞானசம்பந்தர் திருவருட்கழகம் என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. இதுபற்றி, எனது ஊர்ப் பெரியவர்கள் சிலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.

சனி, 2 ஏப்ரல், 2011

தாமிரவருணி


(இக்கட்டுரை, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக 2004ல் நான் எழுதிய "தீர்த்த மகிமை' கட்டுரையின் ஒரு பகுதி. நடைமுறையில் தாமிரபரணி என்றுதான் கூறுவர். ஆனால் இக்கட்டுரையில், திருநெல்வேலித் தலபுராணத்தில் பயின்று வரும் "தாமிரவருணி' என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளேன்.)

தீர்த்த யாத்திரை ஏன்?


(திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக நான் எழுதிய "தீர்த்த மகிமை' கட்டுரையின் முழுவடிவம், இன்று வீட்டில் தேடிய போது கிடைத்தது. அதில் முன்பாதியை மட்டும் இத்தலைப்பில் நான் இங்கு இட்டுள்ளேன்.)

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

கார்த்திகை தீபமும் கணம்புல்ல நாயனாரும்

ளியைத் தெய்வமாக வழிபடுவது இவ்வுலகம் முழுவதும் இருந்த - இருக்கின்ற வழக்கம். கண்முன்னே தெரிகின்ற ஒளியே கணந்தோறும் தன் வாழ்வுக்கு ஆதாரம் என்பதை உணர்ந்த மனிதகுலம் அதைத் தொழுவதில் வியப்பில்லை.

புதன், 30 மார்ச், 2011

திருநெல்வேலித்தல தீர்த்த மஹிமை

(இக்கட்டுரை, 2004ல் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி வெளியான "கும்பாபிஷேக மலர்' ஒன்றுக்கு நான் எழுதி வெளிவந்தது. மிக விரிவாக எழுதியிருந்த போதும், இடம் கருதி இக்கட்டுரை அப்போது சுருக்கப்பட்டது. அந்தச் சுருங்கிய வடிவத்தையே இங்கும் தந்திருக்கிறேன். அப்போது எழுதியதில் ஒரு மாற்றமும் செய்யாமல் அப்படியே தந்திருக்கிறேன்.)

ஞாயிறு, 20 மார்ச், 2011

சங்கராசாரியர் சரித்திர ஆராய்ச்சி - 3

இனிப், பரமசிவன் மோகினிபா லிச்சையுற்றாரென்ற பெரும் பாதகப் பெரும் பொய்யைவிட்டு உண்மைநோக்குவார் பின்வருங் கந்தபுராண சரித்திரத்தை நோக்குக.

சங்கராசாரியர் சரித்திர ஆராய்ச்சி - 2

இவ்விதக் கலப்புகள் வேறு சில நூல்களிலுமுள்ளன. இதனை, வான்மீகி (2400) என்று கூறிய ராமாயணம் இப்போது அவ்வெண்ணைக் கடந்து வழங்குதலுஞ் சான்றாகும்.

சங்கராசாரியர் சரித்திரவாராய்ச்சி - 1


(இஃது தேவிகோட்டை ஸ்ரீ வன்தொண்டர் அவர்கள் மாணாக்கருள் ஒருவராகிய , காரைக்குடி ஸ்ரீ மான் ராம. சொ.சொக்கலிங்கச் செட்டியாரவர்களால் இயற்றப்பெற்று, தேவிகோட்டை ஸ்ரீ மான் மெ. அரு. நா. ராமநாதச் செட்டியாரவர்களால் அச்சிடப்பட்ட சோமசுந்தரமாலை வேதவனேசஸ்தவம் என்னும் நூல்களின் முகவுரை.)

Translate