ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்


இந்த திருவாசகத்துக்கு இலக்கியமாக திகழ்பவர் திருவான்மியூர் தியாகராஜா தான். இந்த வருடம் மயிலாப்பூரிலும் திருவான்மியூரிலும் ஒரே நாளில் பங்குனி திருவிழா தொடங்கியது.

மற்ற கோயில்களுக்கு இல்லாத சிறப்பு, திருவான்மியூருக்கு உண்டு. இங்கு திருவிழாவில் சந்திரசேகரர் தான்  வீதியுலாவுக்கு வருவார்.
அம்மை தனியாக வருவதில்லை. சந்திரசேகரர் வந்து சென்ற பிறகு தியாகராஜா வருவார். அவருக்கு முன்னால் அம்மை வருவாள்.

இருவரும் தங்கள் கேடயத்தை தவிர தேர் உட்பட வேறு வாகனங்களில் வருவதில்லை. திருவிழாவில் ஓரிரு நாட்கள் தவிர, மற்ற நாட்களில் தியாகரை பார்ப்பது குதிரைக் கொம்பு தான்.

கடந்த வருடம் போல் அல்லாமல், இந்த வருடம், முக்கிய நாட்களில் மட்டும், சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.

கொடிஇறக்கம் அன்று கோயிலுக்கு சென்றேன். அது முடிந்து, தியாகர், வீதியுலா வந்தார். அது தொடர்பான சில காட்சிகளை எனது கேமராவில் பிடித்தேன்.

குறிப்பாக, திருவாரூர் போல, இந்த தியாகரும், இருந்தாடும்  பெருமான் தான். அவரது நடனம்,  விழா காட்சிகளை இங்கே பதிவிடுகிறேன்.


திருவான்மியூர் தியாகர் 

திருவான்மியூர் தியாகர் 

அம்மை 

கொடியிறக்க பூசைகள் 

கொடிமரம் 

கொடிஇறக்கம் காண வந்த அம்மையப்பர் 

மேலைக்கோபுரம், கொடிமரம், அம்மையப்பர் 

தியாகர் வீதியுலா 

மேலைக் கோபுர வாசலில் 

நள்ளிருளில் நட்டம் 

கோயில் வாசலில் 

அன்பர்கள் நடுவே 

வான்மீகி முனிவருக்கு நடன காட்சி 

சற்றே ஓய்வு 

காண வந்த அன்பர்கள் 

காண வந்த அன்பர்கள் 

அடியார்கள் தோளில் வான்மீகி முனிவர் 

மண்டபத்தில் 

தியாகரை சுற்றி வரும் அம்மை 

திருவிழா கூட்டம் 

கைரேகை சோசியம் 

கிழக்கு கோபுரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate