திங்கள், 30 மார்ச், 2009

திருவார் பெருந்துறை

முன்னொரு காலத்தில் ஐம்புலன்களையும் வென்ற முனிவர்கள் ஆயிரம் பேர் உத்தரகோசமங்கை எனும் தலத்தில் சிவபிரானை நோக்கி தவம் இருந்தனர்.

இறைவன் அவர்களிடத்து ஆகம நூல்களை அளித்து , அங்குள்ள தீர்த்தத்தில் ஒருநாள் பெரிய தீப்பிழம்பு தோன்றும் எனவும் , யாவரும் அதில் கலந்து தம்மை அடைக எனவும் ஆணையிட்டான்.

வியாழன், 26 மார்ச், 2009

திருமுறைகள்

ஒரு மொழியில் காலந்தோறும் தோன்றி, காலத்தையும் கடந்து நிற்கின்ற இலக்கியங்களே, அம்மொழியின் ஏற்றம், எளிமை, போக்கு, வரலாறு முதலிய அனைத்தையும் எடுத்துரைப்பனவாக விளங்குகின்றன. இலக்கியங்களை `காலக் கண்ணாடி' என்றே அறிஞர்கள் போற்றுகின்றனர்.

குருவின் திருவடி

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருப்பெண்ணாகடம் எனும் ஊரில் அச்சுத களப்பாளர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தமக்கு, நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாமையால் மிகவும் மனம் வருந்தியவராய், தமது குல குருவாகிய அருணந்தி சிவாசாரியாரிடம் சென்று தமது மனக்குறையைக் கூறினார்.

கணபதி என்னும் களிறு

கி.பி. 1,2,3 ஆம் நூற்றாண்டுகளில் வளத்திலும் வாழ்விலும் குறையொன்றும்இல்லாதிருந்த தமிழ்நாடு 4 ஆம் நூற்றாண்டளவிலே பெரும் நலிவைச் சந்தித்தது. இன்றைய கர்நாடகம் மற்றும்அதன் வடபகுதிகளில் வாழ்ந்தவர்கள் தமிழகத்தின்மீது படையெடுத்து நெடுங்காலம் ஆண்டனர்.

வியாழன், 19 மார்ச், 2009

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் நன் நோக்கம்

”நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலிஷ் வித்தியாசாலையிலே இங்கிலிஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841)பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனாயினேன். பிதிரார்ச்சிதம் நான் பெறவில்லை.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்3.024.திருக்கழுமலம் 


பண் - கொல்லி 

திருச்சிற்றம்பலம் 


கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.3052மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே
1

உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.

Translate