செவ்வாய், 19 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - பொது


1. திருஞானசம்பந்தர் செய்யதிரு வடிபோற்றி
அருள்நாவுக் கரசர்பிரான் அலர்கமல பதம்போற்றி
கருமாள எமையாளுங் கண்ணுதலோன் வலிந்தாண்ட
பெருமாள்பூங் கழல்போற்றி பிறங்கியவன் பர்கள் போற்றி

-கோயிற்புராணம்


2. பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலுார்  வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலித் திருவாத வூரர்திருத் தாள்போற்றி

-சேக்கிழார் நாயனார் புராணம்

3. பருவமேது மிலார்புகும் பரமபதப் பொருள்கள்
கருதியோம்ப ஒண்ணாதெனக் கண்ணுதற் பெருமான்
அருளினாற் பலஅதிசயச் செந்தமிழ் பாடிப்
பொருளிதாமெனத் தெரித்த நால்வர்களையும் புகழ்வாம்

-விநாயக புராணம்

4. அடலமணைக் கழுவேற்றுந் திருஞான சம்பந்தர் அடிகள் போற்றி
கடலிடைக்கற் றுாண்மிதப்ப ஓதுதமிழ்க் கடலினடிக் கமலம் போற்றி
மடலவிழ்பூங் குழற்பரவை வாசலினம் மிறையிருதாள் வருந்த மீண்டுந்
தொடர்வருந்துா தெனவிடுத்த சுந்தரன்பொற் றாமரையாந் துணைத்தாள் போற்றி

-கடம்பவன புராணம்

5. பின்னாலுஞ் சடையானே பெரியபொருள் எனத்தேறி
என்னோரும் உய்கவென என்பைப்பெண் உருவாக்கிக்
கொன்னாக விடநீக்கிக் குழவிகராந் தரவழைத்துச்
சொன்னாரிக் களித்தருள்நால் தொண்டர்மலர்க் கழல்போற்றி

-திருக்கொட்டையூர் தலபுராணம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate