சனி, 30 மார்ச், 2013

ஓட்டளியுங்கள்


கும்பமேளாவில் பங்கேற்க நான், தினமலர் நாளிதழ் வரைகலை நிபுணர் கார்த்திகேயன், புகைப்பட கலைஞர் சத்திய சீலன் மூவரும் சென்றோம். தொடர்ந்து டில்லியில் இரண்டு நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.

அங்கு குதுப்மினார் சென்று பார்த்து விட்டு, அந்த வளாகத்தில் உள்ள இல்டுமிஷ் சமாதி அருகில் புல் தரையில் அமர்ந்திருந்தோம்.


வெள்ளி, 29 மார்ச், 2013

சூரிய வட்டத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா


(கபாலீஸ்வரர் கோவிலின் இந்தாண்டு பங்குனி பெருவிழாவையொட்டி நான் எழுதி வெளியான செய்தி)

(மார்ச் 20, 2013)

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று காலையில் சூரிய வட்ட வாகன வீதி உலாவும், இரவில் சந்திர வட்ட வாகன வீதியுலாவும் நடந்தன.

வியாழன், 28 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 6


சமோசா, பூரி, ஜிலேபி, சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை

(பிப்ரவரி 28, 2013)

அலகாபாத்தில் கும்பமேளாவில் கலந்து கொள்ள, லட்சக்கணக்கான பேர் தினசரி அங்கு கூடும் நிலையில், சாதாரண குடிநீர் பாட்டில் முதல், உணவு வரை அனைத்து பொருட்களும், ஓரளவு நியாயமான விலைக்கே கிடைக்கின்றன.

ஒருவர் ஒருவேளை சாப்பாட்டை, 20 ரூபாயில் முடித்துக் கொண்டு விடலாம் என்பது ஆச்சரியமான செய்தி.

புதன், 27 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 5


கங்கையில் புனித நீராடுவதில் மகிழும் தமிழர்கள்

(பிப்ரவரி 27, 2013)

உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதில், தமிழகத்தில் இருந்து மட்டும், 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

அலகாபாத்தின் மோரி பகுதியில் உள்ள சிவமடம், நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரம் ஆகிய இரு இடங்களிலும், தமிழர்கள் பெருமளவில் தங்குகின்றனர்.

செவ்வாய், 26 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 4

நாடு முழுதும் 7 லட்சம் நாகா சாதுக்கள்:
 ஸ்ரீதிகம்பர் சிவராஜ் கிரி சாது தகவல்

(பிப்ரவரி 26, 2013)

கும்பமேளா என்ற உடனே, நாகா சாதுக்கள் என்ற அகோரிகள் தான் நினைவுக்கு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு விதங்களில் இவர்களை பற்றிய செய்திகள், சமுதாயத்தின் அடிமட்டம் வரை சென்றிருக்கின்றன. இவர்கள் மொத்தம், 7 லட்சம் பேர் உள்ளனர்.

திங்கள், 25 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 3


3 கோடி பக்தர்கள் கங்கையில் புனித நீராடல்
பாகுபாடின்றி மக்கள் சங்கமித்தனர்
(பிப்ரவரி 11, 2013)

உ.பி., மாநிலம் அலகாபாத்தில், தை அமாவாசை புனித நீராடலில், 3 கோடி மக்கள் பங்கேற்றனர். அதிகாலையில், ஆயிரக்கணக்கான நாகா சாதுக்கள், கங்கையில் நீராடி அணிவகுப்பாக நடந்து சென்ற காட்சி, மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

உ.பி., மாநிலம் அலகாபாத், பிரயாகையில் கடந்த, ஜன., 14ம் தேதி துவங்கிய கும்பமேளா, வரும் மார்ச், 10ம் தேதி வரை நடக்கிறது.கும்பமேளாவின் உச்சக்கட்டமான, தை அமாவாசை நீராடல், நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஞாயிறு, 24 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 2


மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது கங்கை கரை
 இரண்டு நாட்களில் 1 கோடி பேர் வருகை

(பிப்ரவரி 09, 2013)

 கும்பமேளாவின் உச்சகட்ட தினமான, தை அமாவாசை நீராடலில் பங்கேற்பதற்காக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும், அலகாபாத்திற்கு, ஒரு கோடி பேர் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உ.பி., மாநிலம் அலகாபாத் பிரயாகையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா, இந்தாண்டு, ஜன., 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

சனி, 23 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 1


தினமலர் நாளிதழின் இணை ஆசிரியரின் அனுமதியின் பேரில், நான், என்னுடன் பணியாற்றும் கிராபிக்ஸ் டிசைனர் கார்த்திக், புகைப்பட கலைஞர் சத்திய சீலன் மூவரும் கும்பமேளாவில் பங்கேற்க அலஹாபாத் சென்றோம்.

அந்த அனுபவங்களை தனித்தனியாக பதிவிடுவேன்.அதற்கு முன்பாக தினமலர் நாளிதழில் கும்பமேளா தொடர்பாக வெளிவந்த எனது செய்திகளை இங்கே அடுத்தடுத்து பதிவிடுகிறேன்.

Translate