புதன், 18 டிசம்பர், 2013

முடிந்தது திருவாதிரை - கொட்டுச் சத்தம் கேட்கிறது


ஒருவழியாக, பால்வண்ணநாதர் கோயிலில்,  திருவாதிரை விழா  முடிந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கிய நீராட்டு, 5 மணிக்கு முடிந்தது. அலங்காரம், திருவெம்பாவை ஓதல், தீபாராதனை, பசுத் தீபாராதனை எல்லாம் நிறைவுற்று, முற்பகல் 11 மணிக்கு நடராஜர் வீதியுலா புறப்பட்டார்.

எட்டுத் திசைகளிலும், அவருக்கு திருவெம்பாவை ஓதப்பட்டது. இரு வீதிகளிலும் நிறைய திருக்கண் சார்த்தப்பட்டது.


நடராஜருக்கும், சண்முகருக்கும் என, சிறப்பாக உருவாக்கப்பட்ட செப்புச்  சப்பரத்தை எடுக்கும் எங்கள் முயற்சி தோல்வியடைந்ததால், கேடயத்தில் தான் சுவாமி எழுந்தருளினார்.

பிற்பகல் 1 மணிக்கு சப்பரம் இறங்கியது. சீர்பாதக் காரர்கள் அடுத்து சர்க்கரை விநாயகர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு புறப்பாடு பிற்பகல் 2 மணிக்கு மேல் தான் தொடங்கியிருக்க வேண்டும்.

பால்வண்ணநாதர் கோயிலில், நடராஜர் இறங்கிய உடன், தீர்த்தவாரி முடிந்து, விடையில் அப்பனும், அம்மையும் வீதியுலா வந்தனர்.

அதையடுத்து, சர்க்கரை விநாயகர் கோயில் நடராஜர் சப்பரம் எங்கள் தெருவுக்கு வந்தது. சர்க்கரை விநாயகர் கோயில் திருவிழாவில், நான்கு, எட்டு, பத்து திருநாட்களில் மட்டும் எங்கள் தெருக்களுக்கு சப்பரம் வரும். அந்த அடிப்படையில் தான் இன்றும்.

இரு கோயில்களிலும், திருவிழாக்களுக்கு, தவில், மேளம், தம்பூர் எனப்படும் டிரம்ஸ் ஆகிய வாத்தியங்கள் அமர்த்தப்படும்.

எனது சிறுவயதில், திருவிழா  முடிந்த ஒருவாரத்திற்கு, மிக துாரத்தில், தம்பூர் சத்தம் மட்டும் கேட்பதாக ஒருபிரமை நீடிக்கும்.

இப்போதும் அந்த பிரமை, அதாவது கொட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டே  இருக்கிறது. இனி, திருவிழா அடுத்த ஆண்டு தான்.

கீழே,  திருவாதிரை  வீதியுலா படங்களைப் பார்க்கலாம்.

புறப்பாடுகுடவருவாசல் தீபாராதனை


நடராஜர்

எங்கள் வீட்டருகில்

தீர்த்தவாரி உற்சவம்


விடையில் அம்மையப்பர்

சர்க்கரை  விநாயகர் கோயில் நடராஜர்சர்க்கரை விநாயகர் கோயில் மாணிக்கவாசகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate