சனி, 13 ஏப்ரல், 2013

மயிலை பங்குனி பெருவிழாவின் அற்புத காட்சிகள்


கடந்த 17-03-2013 முதல் 28-03-2013 வரை மயிலாப்பூர் கபாலீச்சரத்தில், பங்குனி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடந்தாண்டு அதே பங்குனி பெருவிழாவில், நான் நிருபராக இருந்ததால், தினசரியும் பங்கேற்றேன். அது தொடர்பான எனது கட்டுரைகள், தினசரி, "தினமலர்' நாளிதழில் வெளிவந்தன.


இந்தாண்டு, உதவி ஆசிரியராக இருப்பதால், மயிலைக்கு செல்ல இயலவில்லை. அதேநேரம், தினசரி மயிலை தொடர்பான ஒரு ஓவியம், "தினமலரில்' வெளியாக வேண்டும் என, இணை ஆசிரியர் கூறிவிட்டதால்,  அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, உடன் பணியாற்றுபவரும், ஓவியருமான பாலமுருகனிடம், எனது கேமராவை கொடுத்திருந்தேன். தினசரி அவர், மயிலைக்கு சென்று விழாவின் காட்சிகளை படம் பிடித்துக் கொள்வார்.

அவற்றின் அடிப்படையில் அவர் வரைந்த அற்புதமான ஓவியங்கள், "தினமலரில்' வெளிவந்தன. அவர் எனது கேமராவில் படம் பிடித்த காட்சிகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மயிலை கபாலீச்சரமும் தெப்பக்குளமும் 
வெள்ளி மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் கணபதியை கைதொழுதேத்தும் அன்பர்கள் 

அதிகார நந்தி வாகனத்தில் கபாலி 

அதிகார நந்தி வாகனத்தில் கபாலி  

கபாலி மீது பூத்தூவும் கந்தர்வன்  
கந்தருவி வாகனத்தில் கற்பகாம்பாள் 

கந்தருவன் வாகனத்தில் சிங்காரவேலர் 
வெள்ளி ரிஷபத்தில் சண்டேசர் 

புருஷா மிருக வாகனத்தில் தீபாராதனை 

புருஷா மிருக வாகனத்தில் கபாலி 

புருஷா மிருக வாகனத்தில் கபாலி 
சிம்ம வாகனத்தில் அம்மை வேங்கை வாகனத்தில் வேலவர் 

நல்லிசை வல்ல நாதஸ்வர,தவில் கலைஞர்கள் 

மயிலாப்பூர் தேர் 

மயிலாப்பூர் தேரோட்டம் 

கற்பகாம்பாள் தேர் 

கயிலாய வாத்தியக் குழுவின் இசை 

தெப்பக்குள மண்டபத்தில் திருஞானசம்பந்தர் 

ஆளுடைய பிள்ளைக்கு அபிஷேகம் 

தெள்ளு நீரால் நீராட்டு 

சந்தன சாந்தணிந்த சந்தத் தலைவர் 

சந்தன அபிஷேகம்
சந்தன அபிஷேகம்

சந்தன அபிஷேகம் 

ஸ்நபன அபிஷேகம் 

ஸ்நபன அபிஷேகம் 

தூபம் 

எழுந்தருளுகிறார் எங்கள் குல தலைவர் 

சிவநேச செட்டியார் 

பூம்பாவையும் செட்டியாரும் 

அறுபத்து மூவர் 

அறுபத்து மூவர் 

நால்வர் பல்லக்கு 
மணிவாசகர் கபாலி வரும் முன்பே கண்கவர் கோலங்கள் தயாராகின்றன 

விமரிசையாக தயாராகும் வெள்ளி விமானம் 

வெள்ளி விமானத்தில் கபாலி 
மண்ணினிற் பிறந்தார் பெரும்பயன் மதிசூடும் 
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் 
கண்ணினால் அவர் நல்விழா பொலிவு கண்டார்தல் 
உண்மையாமெனில் உலகர் முன் வருகென உரைப்பார் 

3 கருத்துகள்:

Translate