வியாழன், 30 ஏப்ரல், 2009

சீர் பல நல்கும் சித்திரை பௌர்ணமி

மது பாரதப் பண்பாட்டில் ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு பின்னணி இருப்பதை நாம் காண முடியும். விழாவிற்கான காரணங்கள் , விழாக் கொண்டாடினோர், பயனடைந்தோர் முதலிய செய்திகள் நமது புராணங்களில் காணப்படுகின்றன. இது ஒரு வகையில் வரலாற்றுப் பதிவு எனலாம். மகிழ்ச்சியை அளிக்கும் இவ்விழாக்களைத் தொடர்ந்து கொண்டாடுவதற்கான ஊக்கத்தை இவை நமக்கு அளிக்கின்றன.

புதன், 29 ஏப்ரல், 2009

தென் திசைத் திலகம் திருமாலிருஞ்சோலை

ரம், விபவம், வியூகம், அர்ச்சை எனும் 4 நிலைகளில் திருமால் உயிர்களுக்கு அருள்புரிகின்றார் என வைஷ்ணவ ஆகமங்கள் கூறும். இந்நான்கினையும் சங்கர்ஷணன், வாசுதேவன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என அவை அழைக்கும். இதைப் பற்றிய குறிப்பொன்று பரிபாடலில் உள்ளது.

திங்கள், 20 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 4

சமணத்தின் வீழ்ச்சி

க, வைதீக சமயம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பரத கண்டம் முழுவதுமே நலிவுற்றிருந்தது. பௌத்த சமயங்கள் புயலெனப் பொங்கி மக்களைப் பெருமளவில் ஈர்க்கலாயின என்பது மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெரிய வருகின்றது.

வியாழன், 16 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 3

களப்பிரர்களும் சமணமும்கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்து முடியுடை மூவேந்தர்களையும் வடபுலத்திலிருந்து வந்த களப்பிரர்கள் வென்று தமிழகத்தைப் பிடித்துக் கொண்டனர்.

பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் – 2


ன்னூல் திரட்டு ‘கடவுள் வாழ்த்து’ முதலாக ‘கற்பனை’ ஈறாக 54 அதிகாரங்கள் உடையது. இவ்வதிகாரங்களில் பெரும்பாலன திருக்குறள், நாலடியார் போன்ற நீதிநூல்களில் உள்ளன போல வழக்கமானவையே. கடவுள் வாழ்த்து, பெரியோர் இயல்பு, கல்வி, மானம், அறம், இல்லறம் போன்ற வழக்கமான அதிகாரங்களுக்கிடையே பெற்றோர்ப் பேணல், மனம், அடைந்தோர்ப் புரத்தல், காமக்கேடு, செல்வச்செருக்கு, அருமை, கற்பனை ஆகிய புதிய தலைப்பிலான அதிகாரங்களையும் தேவர் வைத்துள்ளார்.

பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர் - 1


இன்னூல்திரட்டு இதனுக்குஏது நிகர்இன்று எனவே
பன்னூல்திரட்டு ஒன்று பாலித்தான் – நன்நூல்கட்கு
ஈண்டுஇத்துரையே இடமென யாவும் தேர்ந்த
பாண்டித்துரை யாம் பதி.
– வை. மு. சடகோபராமாநுஜாசாரியார்.

புதன், 15 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 2

தமிழகத்தில் சிவ வழிபாடுவடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் பண்டைக் காலந்தொட்டு சிறந்து வரும் வழிபாடுகளுள் சிவ வழிபாடு முதன்மையானதாகும்.

ஆனந்த நடமாடுவார்

ண்ணன், பாரதி, முருகன், காமன், முதலிய தெய்வங்கள் ஆடிய நடனம் பற்றிய சிலப்பதிகார உரை மற்றும் கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிகிறோம்.

சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் – 2


19. ............இதன்பின் சயனாலய முத்திரா தண்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனால் ஆலயத்தில் அருள் சக்தியுள்ள சூட்சும நிலையை இராக் காலங்களில் வலி மீறி நிற்கும் அசுரர்களால் பாதிக்கப் படாமல் பாதுகாப்பதே வைரவர் வேலையாம். இதுவன்றி மனிதர் செய்ய வேண்டிய பாரா வேலையை அவர் செய்வார் என்று கொள்வது தவறாம் -பக். 54

சனி, 11 ஏப்ரல், 2009

சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் - 1

சில குறிப்புகள்
1997 ல் இருந்து சைவ சம்பந்தமான பல நூல்களைப் பயில எனக்கு வாய்ப்பு இருந்தது. அவ்வப்போது படிக்கும் நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்து வைப்பது என் வழக்கம். திருச்செந்தூர் முத்தையா பட்டர் எழுதிய சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் எனும் நூலினை திருநெல்வேலி பெரிய தெரு சபாபதி முதலியார் என்னிடம் படிக்கக் கொடுத்தார். அந்நூலில் இருந்து முக்கியமான குறிப்புகள் இங்கே.........

பாவைப் பாட்டும் பாவை நோன்பும்

ங்க காலந்தொட்டு இன்று வரை நமக்குக் கிடைக்கும் சிற்றிலக்கிய வகைகளில் பாவைப் பாட்டும் ஒன்று. ‘பாவை’ என்றாலே நமக்குத் திருவெம்பாவையும் திருப்பாவையும்தான் நினைவுக்கு வரும்.

வளம் தரும் வசந்தமே வருக!

ழமை வாய்ந்த நம் பாரத கலாசாரத்தில் கொண்டாடப் படும் ஒவ்வொரு பண்டிகையுமே கால அடிப்படையிலும் தத்துவ அடிப்படையிலும் அமைந்துள்ளது.

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 1

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.

பங்குனி உத்திர நாள் ஒலிவிழா

லிவிழா வீதி மடநல்லார் மாமயிலை’யில் பங்குனி உத்திரத் திருநாள் பெருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாய்த் தொடங்கிவிட்டது. மயிலையிலேயே குடியிருந்தால் தினமும் கண்டு களித்து இன்புறலாம். வாய்ப்பில்லை.

திங்கள், 6 ஏப்ரல், 2009

இலங்கையில் கிறிஸ்தவம்

லங்கையின் வடபாகம் பண்டைக் காலத்தில் நாகர்களின் உறைவிடமாய்த் திகழ்ந்தது. இயக்கர்களும் இலங்கையில் இருந்தனர். கௌதம புத்தர் இலங்கைக்கு 3 முறை வந்தார் என `மகாவம்சம்' கூறுகிறது. அக்காலந்தொட்டு புத்தமதம் இலங்கையில் பரவுவதாயிற்று 

மகாபாரதம் தமிழாக்கிய ம.வீ.ராமானுஜாசாரியார்

ச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தபிறகு அச்சேறிய முதல் மொழி தமிழ்தான். கி.பி. 1800க்குப் பிறகு, அச்சிடுதல் குறித்த சட்டங்கள் விரிவாக்கப்பட்டு பரவலாக அச்சிடுதல் நடைபெற ஆரம்பித்தது.

சனி, 4 ஏப்ரல், 2009

உலகளந்த உத்தமன்


வேதம் அனைத்திற்கும் வித்தாகும் தமிழருளிச் செய்த கோதை, திருப்பாவை 4 ஆம் பாசுரத்தில் `தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்' என்று அருளிச் செய்தபடியே, மழை பெய்து கொண்டிருந்த (2008) மார்கழி 3 ஆம் நாளில், சென்னை ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் வேளுக்குடி கிருஷ்ணனின் திருப்பாவை உரை நிகழ்ந்தது. கேட்டவர்களைப் பிணிக்கும் தன்மையதாய் திகழ்ந்த அவர் உரையிலிருந்து சில...  

ஆகமங்களைப் புறக்கணித்த அறநிலையத்துறை


டந்த 40 வருடங்களில் திராவிடக் கட்சிகள் செய்த மாபெரும் சாதனைகளுள் இரண்டு குறிப்பிடத்தக்கன. 


ஒன்று – தமிழகத்தில் தமிழே படிக்காமல் பட்டம் பெற்று வேலை வாங்கி விடலாம்; 

வியாழன், 2 ஏப்ரல், 2009

புத்தாண்டு தினமா? போக்கிரி தினமா?

ழக்கம்போல் 2008, ஜனவரி 1 வந்துவிட்டதுதான். ஆனாலும் இந்த வருடப் பிறப்பின் போது நடந்த பல்வேறு அநாகரீகமான செயல்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன.

Translate