இந்தக் கோயிலின் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று. 1943ல் அம்பை மு.ரா.கந்தசாமிப் பிள்ளை எழுதிய இந்நூலில் அப்போதைய கல்வெட்டுத் தரவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
நுாலைப் படிக்க இங்கே சொடுக்குக:
தொண்டர்கள் நயினாரை சம்பந்தர் வழிபட்ட காட்சி |
சம்பந்தர் உத்தரவுப்படி முதல் குலோத்துங்க சோழன் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தான் என்பதும், சம்பந்தரே இக்கோயிலுக்கு செப்புத் திருமேனிகள் செய்து கொடுத்தார் என்பதும் இதில் புதிய செய்திகள்; திருத்தப்பட வேண்டியவை.
தொண்டர்கள் நயினார் கோயில், நெல்லை டவுன் |
நெல்லையில் சம்பந்தர் பெயரில் சில மடங்கள் இருந்துள்ளன. அவற்றின் தலைவர்களில் யாராவது ஒருவர் மூலம் அரசன் திருப்பணிகளை மேற்கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து.
தொண்டர்கள் நயினார் கோயிலில் உள்ள சம்பந்தர் |
இந்நூலில் நெல்லை நான்கு ரதவீதிகள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அப்போதிருந்த 42 மடங்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன இன்று அவற்றின் நிலைமை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
1970கள் வரை வெளியான கோயில் வரலாற்று நூல்கள் பெரும்பாலானவற்றில் கோயிலின் சொத்துக்கள், நகைகள் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் அதற்கு ஓர் உதாரணம்.
1970களுக்குப் பின் இந்த நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அநேக கோயில்களின் வரலாற்று நூல்கள் வெளியீடு முழுவதும் நிறுத்தப்பட்டு விட்டது.
கொங்கு நாட்டைச் சேர்ந்த சி.எம்.ராமச்சந்திரன் செட்டியார் இந்து சமய அறநிலையத் துறை கமிஷனராக இருந்தபோது இதுபோன்ற நூல்கள் வெளிவர பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளார். இன்றைய நிலைமையை நாம் அறிவோம்.
இதுபோன்று வரலாறு மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட கோயில்களின் நூல்களை வெளிக் கொண்டு வருவதன் மூலம் அறநிலையத் துறையின் ஊழல்களையும் வெளிக் கொண்டுவர முடியும்.
இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டாலே தர மறுக்கும் அறநிலையத் துறையை இதுபோன்ற நூல்களில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சட்டரீதியாக எதிர்கொள்ள முடியும்.
(படங்கள் உதவி: https://temple.dinamalar.com/New.php?id=193)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக