கும்பமேளாவில் பங்கேற்க நான், தினமலர் நாளிதழ் வரைகலை நிபுணர் கார்த்திகேயன், புகைப்பட கலைஞர் சத்திய சீலன் மூவரும் சென்றோம். தொடர்ந்து டில்லியில் இரண்டு நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.
அங்கு குதுப்மினார் சென்று பார்த்து விட்டு, அந்த வளாகத்தில் உள்ள இல்டுமிஷ் சமாதி அருகில் புல் தரையில் அமர்ந்திருந்தோம்.
கார்த்திகேயன் தனது கேமராவை புல் தரையில் வைத்திருந்தார். அங்கு வந்த அணில் ஒன்று கேமரா அருகில் சென்று சுற்றி சுற்றி வந்தது.
ஒரு கட்டத்தில் அதன் மீது ஏறி எட்டி பார்த்தது. அந்த அழகிய காட்சியை சத்திய சீலன் தனது கேமராவில் பதிவு செய்தார்.
அணில் விளையாடும் கேமரா |
படம் உங்களை கவர்ந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று ஓட்டளியுங்கள்.
ஓட்டளிப்பது எப்படி?
நேஷனல் ஜியோக்ராபியின் http://ngm.nationalgeographic.com/your-shot/daily-dozen இந்த முகவரிக்கு சென்று, இடது கைப்பக்கம் உள்ள பெட்டியில் மார்ச் 4 வது வாரத்தை சொடுக்கவும்.
அதில் பட வரிசையில் 19 வது படமாக இது இடம் பெற்றுள்ளது. HOME வரிசைக்கு கீழ் வரிசையில் Voting Machine என்பதை சொடுக்கி ஓட்டளிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக