வியாழன், 26 மார்ச், 2009

கணபதி என்னும் களிறு

கி.பி. 1,2,3 ஆம் நூற்றாண்டுகளில் வளத்திலும் வாழ்விலும் குறையொன்றும்இல்லாதிருந்த தமிழ்நாடு 4 ஆம் நூற்றாண்டளவிலே பெரும் நலிவைச் சந்தித்தது. இன்றைய கர்நாடகம் மற்றும்அதன் வடபகுதிகளில் வாழ்ந்தவர்கள் தமிழகத்தின்மீது படையெடுத்து நெடுங்காலம் ஆண்டனர்.
இவர்கள்"வடுகர்', "கருநாடகர்', "களப்பிரர் என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.இவ்வடுகர்கள் சமண சமயத்தைச்சார்ந்தவர்கள். இவர்கள் காலம் இருண்ட காலம் எனப்படுகிறது.

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் என்பவனால்கருநாடக சமணர்களிடம் இருந்து தமிழகம் மீட்கப்பட்டது.ஆயினும் தெய்வ நம்பிக்கை, இல்லறம்,கூட்டுக்குடும்ப வாழ்க்கை, இசை, கலைஇவற்றுக்கெதிரான கொள்கை உடையவர்களான சமண, பௌத்தர்களால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகள், திருஞானசம்பந்தப் பெருமான் இருவரும் தோன்றிச் சூறாவளியென தமிழகம் முழுவதும் வலம்வந்து பண்ணிசை மூலம் பக்திஇயக்கத்தைத் தொடங்கினர். சமண,பௌத்தர்களை வென்றனர்.
கி.பி. ஏழாம்நூற்றாண்டில் தோன்றிய சுந்தரமூர்த்திகளும், கி.பி. 8 ஆம் நூற்றாண்டில்தோன்றிய மாணிக்கவாசக சுவாமிகளும்பக்தி இயக்கத்தை வளர்த்தெடுத்து,புறச்சமயங்களான சமண, பௌத்தர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டினர். கி.பி. 8 ஆம்நூற்றாண்டில் உச்சநிலையை அடைந்த பக்தி இயக்கம் வடஇந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது.

கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியவரும்,அத்வைத சித்தாந்தத்தை நிறுவியவரும் ஆன ஆதிசங்கரர், அப்பர்சுவாமிகள், திருஞான சம்பந்தர் காட்டிய நன்னெறியில் சென்று,தமிழகம் தவிர்ந்த பாரதம் தேசம் முழுவதும் சென்று நாத்திகமதங்களான சமண, பௌத்தத்தைக் களையெடுத்தார்.

இக்காலகட்டத்தில் அதாவது கி.பி. 870 -907 வரை சோழமண்டலத்தை ஆட்சி புரிந்தவன், ஆதித்த சோழன் என்பவன். பிற்காலச் சோழர்களில் முதல்வனான விஜயாலயச்சோழனின் புதல்வன் இவன். வரலாற்றில் முதல் ஆதித்த சோழன்எனக் குறிக்கப்படுபவன். இவனே திருமுறைகளை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்தவன்.

இவனுக்கு உறுதுணையாக நின்ற மகான் நம்பியாண்டார் நம்பி என்பவர். இவர் திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் "பொல்லாப்பிள்ளையாரி'ன் அருள் பெற்றவர். இவர் ஆதிசைவர்.

இவரது சிறுவயதில் ஓர் அற்புதம் நடைபெற்றது. இவரது தந்தை திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் சன்னிதியில் அர்ச்சகராக இருந்தார். ஒருநாள் அவர் வெளியூர் செல்லும் பொருட்டு நம்பியைஅழைத்து "பிள்ளையாருக்கு அன்று ஒருநாள் மட்டும் பூஜைசெய்ய வேண்டும்' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நம்பிசிறுவர் ஆகையினால், பிள்ளையாருக்குப் பிடித்த அவல்,வெள்ளரி, எள்ளுருண்டை, வாழைப்பழம் முதலியவற்றைவைத்துப் பிள்ளையாரை உண்ணும்படி வேண்டினார்.பிள்ளையார் அசையாமல் இருக்க, நம்பி மனம் பொறுக்காமல்தூணில் தலையை முட்டி உடைக்க முற்பட்டார்.

அச்சமயம் பிள்ளையார் "நம்பி! பொறு!' என்று கூறி, நம்பி காணும்படியாக நிவேதனப் பொருள் அனைத்தையும் உண்டார்.மனம் மகிழ்ந்தநம்பி பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, "பள்ளி செல்லதாமதம் ஆகிவிட்டதால் குருநாதர் கோபித்துக் கொள்வாரே' என்றுகூற, பிள்ளையாரும் "இனி நாமே உனக்கு குருநாதர்' என்று கூறிஅனைத்துக் கலைகளையும் நம்பிக்குக் கற்பித்தார்.இவ்வற்புதத்திற்குப் பிறகு நம்பி, "நம்பியாண்டார் நம்பி' என்றுஅழைக்கப் பெற்றார்.

இது இப்படியிருக்க, ஒருநாள் ஆதித்த சோழனின் சபையில்,அடியார் சிலர் தேவாரப் பாடல்களைப் பண்ணோடும் பாட,அதைக் கேட்டு கண்ணீர் மல்கி மகிழ்ந்த சோழன் தேவாரப்பாடல்கள் மொத்தமும் எங்குள்ளன என்று விசாரிக்கஆரம்பித்தான். அச்சமயம், நம்பியாண்டார் நம்பியின் அற்புதவாழ்க்கை பற்றி சிலர் வேந்தனுக்குக் கூறினர்.

உடனே, சோழன்தனது படை பரிவாரங்களுடன் திருநாரையூருக்கு வந்து,நம்பியிடம் தன் கருத்தைத் தெரிவித்தான்.நம்பிகளும், இதுபற்றிப் பொல்லாப் பிள்ளையாரிடமேகேட்டுத் தெளிவோம் என்று கருதி, பிள்ளையாரிடம்"திருமுறைகள் மொத்தமும் இந்த நாட்டில் எங்குள்ளன?' என்றுதிருவடி பணிந்து கேட்டார்.

பிள்ளையாரும், ""தில்லையில் நடராஜப் பெருமானுக்குக்கருகில் ஓர் அறையில்திருமுறைகள் மொத்தமும் உள்ளன'' என்று கூறி, அறுபத்துமூவர் வரலாறையும், நால்வர் பெருமக்களின் வரலாறையும்நம்பிக்கு விரிவாகக் கூறியருளினார். அவ்வரலாறுகளைக் கேட்டுணர்ந்த நம்பிகள் சோழனிடம் தெரிவித்தார்.

பின்பு சோழன், நம்பிகளோடு தில்லைக்குச் சென்று திருமுறைகளை மீட்டெடுத்தான் என்றும், நம்பிகள் அவற்றை 11திருமுறைகளாக வகுத்துத் தந்தார் என்றும் வரலாறு கூறுகிறது.

பிள்ளையார் தமக்குப் பேரருள் செய்த திறத்தை எண்ணிஎண்ணி உருகிய நம்பிகள், ""விநாயகர் திரு இரட்டைமணிமாலை' எனும் பெயரில் 20 பாடல்களால் விநாயகரைப் போற்றியுள்ளார்.

பின்பு விநாயகர் தமக்குக் கூறிய அடியார் வரலாறுகளை எல்லாம் தொகுத்தும், சுந்தர மூர்த்திகள் பாடியருளிய திருத்தொண்டத் தொகையை மையமாக வைத்தும்"திருத்தொண்டர் திருவந்தாதி' பாடினார். மொத்தம் 89பாடல்களில் அறுபத்துமூவர், தொகையடியார் வரலாறுகளைநமக்குத் தந்துள்ளார்.

இந்நூலின் மூலம் அறுபத்துமூவர் வரலாறுகள் நாடெங்கும் அறியப்பட்டன. ஆதித்த சோழனுக்குப் பிறகுஆட்சிக்கு வந்தவர்கள் தேவாரப் பாடல் பெற்ற கோயில்களை,கற்கோயில்களாகக் கட்டினர். அறுபத்து மூவரையும்கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்கு வழிவகுத்தனர்.நாடெங்கும் திருமுறைகள் படி எடுக்கப்பட்டன. (ஓலைகளில்பிரதி எடுக்கப்பட்டன).

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மூன்றாம்குலோத்துங்க சோழனது காலத்தில் வாழ்ந்த சேக்கிழார்சுவாமிகள், "திருத்தொண்டர் திருவந்தாதி'யைஅடிப்படையாகக் கொண்டே "பெரிய புராணம்' எனப்படும்"திருத்தொண்டர் புராணம்' இயற்றியருளினார்.

ஆசாரியர் யார்? என்று கேட்டால், "ஸ்வயமத ஸ்தாபனம்,பரமத கண்டனம் பண்ணுகிறவர் எவரோ, அவரே ஆசாரியர்'என்பர் சான்றோர்.தன்னுடைய மதக் கொள்கைகளை மக்களிடையே பரப்புவது ஸ்வயமத ஸ்தாபனம்.நம் தேசத்துக் கலை, பண்பாடு, தெய்வ நம்பிக்கைஇவற்றுக்கு விரோதமாக வரக்கூடிய மதத்தை எதிர்த்துவிரட்டுவது பரமத கண்டனம்.

அறுபத்து மூவர், தொகையடியார் என 72அடியார்கள்இருந்தாலும் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியநால்வரையே சமய ஆசாரியர்கள் எனப் போற்றுகின்றனர் பெரியோர். ஏனெனில் இவர்கள் ஸ்வயமத ஸ்தாபனமும் பரமதகண்டனமும் செய்தவர்கள்.

இறைவன் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு நிச்சயம்அருள் செய்வான். அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராயினும்சரி, கடவுளை நம்பினோர் கைவிடப்படார். திருக்கோயில்கள் நம் சமுதாயத்தின் மையமாகத் திகழ்வன. அவை, நம் தத்துவ சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவை. அவையின்றி நம் தத்துவமோ, வழிபாடோ,வாழ்வோ இல்லை.

இம்மூன்று விஷயங்களையும் நாம்அறியும்படி செய்தவர் பொல்லாப்பிள்ளையார்தாம்.அவர் நம்பிகளுக்கு அடியார்வரலாறுகளைக் கூறவில்லையென்றால்,திருவந்தாதியும் பெரிய புராணமும் தோன்றி இருக்காது.இவை தோன்றவில்லை எனில் அறுபத்துமூவர் வழிபாடும், மண் கோயில்கள்கற்கோயில்களாக மாற்றம் பெற்றதும்நடைபெற்றிருக்காது. கோயில்கள்இல்லையென்றால் நம் வாழ்வுதான் ஏது?

பரமத கண்டனம் செய்தஆசாரியர்களை நாம் அறிந்துகொள்ளும்படி அருள்செய்த பொல்லாப் பிள்ளையாரான கணபதி என்னும் களிறை நாமும்வேண்டுவோம், "பரமத கண்டனம் செய்ய எமக்கு வலிமையைத் தாரும்' என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate