நம் உடலும் உள்ளமும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. ஒன்றில்லாமல் ஒன்று இயங்க முடியாது. அதேபோல், நம் கலாசாரமும் நம் மதமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்குகின்றன. வெளிநாடுகளில் இதன் நிலை மாறுபாடானது.
நம் கலாசாரம் காக்கப்பட வேண்டுமானால் நம் மதம் காக்கப்பட வேண்டும். நம் மதம் காக்கப்பட வேண்டுமானால், மதத்தின் மையமான கோயில்கள் காக்கப்பட வேண்டும். கோயில்களைக் காப்பதற்கு அவற்றைச் சுற்றி வாழும் மக்களிடையே கோயில்கள் பற்றிய அவசியத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதற்காகத் தான் உழவாரப் பணி.
பெருக்குதல், மெழுகுதல், குப்பைகளை அகற்றுதல், வெள்ளையடித்தல் மட்டுமே உழவாரப் பணி அல்ல. கோயில்கள் எதற்கு வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் உழவாரப் பணி. கோயில்கள் தலைமுறைக்கும் இருந்தால் தான், நம் கலாசாரம் நம் சந்ததியருக்கும் கிடைக்கும்.
நமக்கொரு தஞ்சாவூரும், மதுரையும், திருப்பதியும் இருப்பதால் தானே நமது முன்னோர்களின் பெருமை நமக்குத் தெரிய வருகிறது! அதே தஞ்சாவூரையும், மதுரையையும், திருப்பதியையும் நம் சந்ததியருக்கும் காப்பாற்றிக் கொடுப்பது நம் கடமை அல்லவா?
தஞ்சாவூர் மட்டுமல்ல, தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு கோயிலும் நம் கலாசாரத்தின் வெளிப்பாடுதான். அது குலசேகர பட்டணம் முத்தாரம்மன் கோயிலானாலும் சரி, நம்மூர் முத்தாரம்மன் கோயிலானாலும் சரி. அவற்றையும் காப்பது நம் கடமை.
நாம் என்ன செய்ய வேண்டும்?
நம்மூர்ப் பகுதிகளில் உள்ள கோயில்களில் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் நடக்கும் உழவாரப் பணிகளில் கலந்து கொள்ள வேண்டும். கூடுமான வரை நம் குடும்ப உறுப்பினர்களில் ஓரிருவரையாவது குறிப்பாக நம் குழந்தைகளையாவது அதில் கலந்து கொள்ள வைக்க வேண்டும்.
எல்லாமே அவசர கதியாகி விட்ட இக்காலத்தில், உடல் உழைப்பு இல்லை. மனசார, நம் குறைகளைச் சொல்லி இறைவனை வழிபட நேரமில்லை.
இந்த இரண்டையும் நமக்கு ஒரேநேரத்தில் வழங்குவதுதான் உழவாரப் பணி. ஆம்.. உடலால் கடினமாக உழைத்து, கோயிலைத் தூய்மைப்படுத்தலாம். அதேநேரம், உள்ள நிறைவோடு நம் குறைகளைச் சொல்லி இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.
இந்த இரண்டையும் நமக்குத் தரும் நல்ல வாய்ப்பான உழவாரப் பணியை நாம் தவற விடலாமா? பாரம்பரியப் பெருமை மிக்க நம் கோயில்களைப் பாழடைய விடலாமா? நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியச் சொத்தை பத்திரமாக அளிக்கத் தவறலாமா?
சிந்திப்போம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக