புதன், 6 ஏப்ரல், 2011

மதமாற்றத்தை எதிர்க்கும் மலாக்கா செட்டிகள்

மலேசியாவின் மூன்றாவது சிறிய மாநிலமான மலாக்கா மாநிலத் தலைநகரான மலாக்கா நகரின் ஒரு பகுதியான "கஜபெராவ்' (காஞ்சிபுரம்) என்ற இடத்தில், இன்று 100 மலாக்கா செட்டிக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


கி.பி.14ம் நுõற்றாண்டில் தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு வர்த்தகத்திற்காகச் சென்ற தமிழர்கள், அங்கிருந்த சீன, மலாய் இனப் பெண்களை மணந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டி வந்தது. அவர்கள் தான் மலாக்கா செட்டிகள்.

காலப் போக்கில் மலேசியா காலனி ஆதிக்கத்தில் சிக்கியது. அதனால் மலாக்கா செட்டிகள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் வந்தன.  இவர்களின் செல்வமும் செல்வாக்கும் மங்கத் துவங்கின.

இன்று மலேசியாவில் மிகச் சிறுபான்மையினராக இவர்கள் இருக்கின்றனர். கடந்த ஐந்து நுõற்றாண்டுகளில், இவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை மறந்து விட்டனர். எனினும் இப்போது மீண்டும் தமிழைக் கற்கவும் தமிழ்ப் பண்பாட்டை காப்பாற்றவும் ஆர்வத்துடன் முயல்கின்றனர்.

மலேசிய அரசின் "பூமி புத்ரா' (மண்ணின் மைந்தர்கள்) அந்தஸ்து, இவர்களுக்கு கிடையாது. மலாக்கா செட்டிகளுக்குப் பின் மலேசியாவில் உருவான இனங்களுக்கு "பூமி புத்ரா' அந்தஸ்து வழங்கப்பட்ட போது, செட்டிகள் புறக்கணிக்கப்பட்டனர்.

இதற்கு முக்கிய காரணம், மற்ற இனத்தவர், கிறிஸ்தவராக அல்லது இஸ்லாமியராக மதம் மாறியவர்கள் அல்லது மாற ஒப்புக் கொண்டவர்கள்.

ஆனால் மலாக்கா செட்டிகள், இன்று வரை தங்கள் தாய் மதமான இந்து மதத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். மத மாற்றம் என்ற புயலில் அகப்படாதவர்கள். அதனாலேயே பல சலுகைகளைத் தரக்கூடிய, "பூமி புத்ரா' அந்தஸ்து இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதைக் கேட்க, செட்டிகள் சமுதாயத்தில் சரியான தலைமையும் இல்லை.

இன்றும், தங்கள் இந்துமதப் பண்பாட்டைக் காக்கும் முயற்சியாக, வாரந்தோறும், ஞாயிற்றுக் கிழமைகளில், தங்கள் குழந்தைகளுக்கு தேவார, திருவாசகங்களைச் சொல்லிக் கொடுக்கின்றனர். இதற்காக இவர்களுக்குச் சொந்தமான கோயில்களில் தனி வகுப்புகள் நடக்கின்றன.

இன்றும் இவர்கள் தேவாரத்தை ஓதுகின்றனர். தமிழே தெரியாத இவர்கள் எப்படி தேவாரம் ஓதுகின்றனர் தெரியுமா? "டிரான்ஸ்லிட்டரேஷன்' எனப்படும் ஒலிபெயர்ப்பு மூலமாக, அதாவது தமிழை ஆங்கிலத்தில் எழுதிப் படிக்கின்றனர்.

 தமது பெரும்பான்மையை இழந்து அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட போதும் கூட தனது பண்பாட்டையும் மொழியையும் இழக்க மாட்டோம், அதற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம் என்று உறுதியுடன் நிற்கும் ஒரே இனமாக மலாக்கா செட்டிகள் சமுதாயம் திகழ்கிறது.

இவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

இவர்களைப் பற்றி மார்ச் மாதம் காலச்சுவடு இதழில் ஒரு கட்டுரை வந்துள்ளது.  அக்கட்டுரையை

http://www.kalachuvadu.com/issue-135/page51.asp

என்ற சுட்டி மூலம் படியுங்கள்.


மலாக்கா செட்டிகள் ஒரு காலத்தில் பொதுவாக "கிலிங்' என்று  அழைக்கப்பட்டனர். இன்று அச்சொல் மிகவும் இழிவாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழர்களைக் குறிக்கும் விதத்தில் இச்சொல் ஏன் வந்தது என்பதை,

http://www.visvacomplex.com/Keling.html

என்ற சுட்டி மூலம் அறிந்து கொள்ளலாம்.


மேலும், மலாக்கா செட்டிகள் பற்றிய மற்றொரு கட்டுரை "திண்ணை' இணைய இதழில் வெளியானது. அதனை.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20912046&format=print&edition_id=20091204

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20912047&format=print&edition_id=20091204

என்ற சுட்டி மூலம் படிக்கலாம்.

இன்னும், தென்கிழக்காசியாவில் குறிப்பாக, சீனாவின் தென்பகுதி, பர்மா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் எவ்வாறு பரவினர், எவ்வாறு வர்த்தகம் செய்தனர், தங்கள் பண்பாட்டை எவ்விதம் பதித்தனர் என்பன போன்ற விவரங்களை

http://manilvv.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-1

என்ற வலைப்பூவில் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.


1 கருத்து:

Translate