ஞாயிறு, 20 மார்ச், 2011

சங்கராசாரியர் சரித்திர ஆராய்ச்சி - 3

இனிப், பரமசிவன் மோகினிபா லிச்சையுற்றாரென்ற பெரும் பாதகப் பெரும் பொய்யைவிட்டு உண்மைநோக்குவார் பின்வருங் கந்தபுராண சரித்திரத்தை நோக்குக.


சிவனது அதிசுந்தர ரூபங்கண்டளவே, விஷ்ணு, தான் புருடோத்தம னென்பதையு மறந்து, மோகினி ரூபங்கொண்ட அம்மட்டிலேயே அச்சுந்தரரூபத்தில் அதிகமோகமுற்று என்னைத் தழுவி என்னிச்சையை மாற்றவேண்டுமென்று பிரார்த்திப்ப, அதுகேட்ட பரமசிவன், உன்னுடைய பிராகிருதரூபத்தால் நமது மாயாதீத சுத்தரூபமாகிய இதனைத் தழுவ முடியாது. தழுவினுஞ் சாம்பராகிவிடும். ஆதலால் உன்னிச்சைப்படி உன்னுருவுக்கியைந்த வேறு ரூபங்கொண்டு பிற்காலத்தில் உன்னைத் தழுவி உன்னிச்சையை முடிப்போம். இப்போது குறிப்பிட்ட காரியத்தைச் செய்யென்று ஆஞ்ஞாபித்தனரென்பதே யுண்மையென்க. சந்தேகமற அக்கந்த புராணத்தில் எப்பொழுதுங்காணலாம்.

இனிச், சங்கரர் சாக்தமத கண்டனஞ்செய்யத் தொடங்கி அச்சக்தியின் கோபத்தாலிடர்ப்பட்டுச் சௌந்தரியலகரி நூலாற்றுதித்துய்ந்தாரென்று கூறியசரிதர், அச்சங்கரர் நீலகண்ட சிவாசாரியரை அடுத்தவமதிப்புற்று அவரைக் கொல்லும்படி நரசிங்கத்தை ஏவ, அது அங்குச்சென்று ஆற்றலின்றித் தம்மீது திரும்பியது கண்டு மிகவருந்திச் சிவாசாரியரை யடைந்து வணங்கி யுண்மை யுணர்ந்து அகம்பிரமக்கோண் முற்றுங்கைவிட்டுச் சிவதீக்ஷாதி பெற்றுச் சித்தாந்த சைவராய்ச், சிவானந்தலகரி சிவபுஜங்கம் தேவி புஜங்கமுதலிய நூல்களைச் சைவபரமாகவே செய்துய்ந்தாரென்பதுங் கூறிலர். இது அவமதிப்பென்று நினைத்தார் போலும்.

இதுவே முந்தினவைக் கெல்லாம் பிராயச்சித்தமாக நின்றுய்வித்த மகிமைத் தென்றுணராமல் இவர் மறைத்துவைத்தாலும் அந்நூல்கள் லோ கப் பிரசித்தியாய்நின் றுண்மை விளக்குகின்றன. சங்கரர் நீலகண்ட சிவாசாரியரை யடைந்து சைவரான மகிமை நீலகண்டவிஜயத்திற்கூறப் பெற்றது. இதனைக் காட்டாவூர்ச் சுந்தரசிவாசாரியரும் சிவா திக்கரத்னாவளியிற் கூறியுள்ளார்.

ஆனைக்கும் அடிசருக்குமென்றபடி, விரிந்துகிடந்த வேதங்களை நன்குணர்ந்து வகுத்துப் புராணங்களையு முறைப்படுத்தோதிய வியாசமுனிவரும் ஒருசமயந் தாமசகணவயத்தராய், விசுவநாத சந்நிதியில் நாராயணனே பதியென்று பொய்புகன்று கைதம்பிக்கப் பட்டு அந்நாராயணர் வேண்டுகோளாலது நீங்கியுய்ந்தார். அதனால் அவருலகராலிழிக்கப்பட்டிலர்.

அதுபோல இச்சங்கரரும், ஆதியில் "உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்." என்ற தேவர் சுருதியின் படி வேதசிவாகமாதி சிவசாஸ்திரமுணர்ந்த பெரியோர்கள் பதியுண்டு பசுவுண்டு பாச முண்டென்று கூறுகின்ற முடிந்த முடிவாகிய சைவசித்தாந்த சத்காரியவாத விரோதமாய்ச், சீவனில்லை செகத்தில்லை ஈசுரனில்லை, பிரமமொன்றேயுள்ளது. நானே அப்பிரமமென்னும் அகம் பிரமங்கூறிக், "காதலினா னான்பிரமமென்னுஞானம் கருதுபசுஞானம்" என்ற சித்தாந்தசுருதிப்படி அகம்பிரமஞான மேற்கொண்டிருந்தாலும் தவப்பயனாற்றிருவருள் கைகூடப்பெற்றுச், சந்திரமௌளீச பூஜாதிசிவ நியமசித்தாந்த சிவஞானியாய் விளங்குதலால், இவர் முன்கொண்ட அகம் பிரமநிலை நோக்கி உதாசீனஞ் செய்யப்பெறாரென்க.

சரித்திரக்காரர்கள், சங்கரரை உயர்த்தக்கருதிப் பாதசுங்ககளுக்கிடமாகக் கூறியவைகளன்றி, அவருக்குள்ளபடி கூறுமேன்மைகளில் யாருக்கும் விரோதமில்லை. குருபக்தி விசேடத்தால் குருவையுயர்த்திக் கூறுதல் எம்மதத்தருக்குஞ் சம்மதமே.

விநாயக சுப்பிரமணியாதியரும் வந்து தொண்டு செய்கிறார் களென்று யார்தாங் கூறுவார்கள். சங்கரர் சிவாம்சமாதலால் விநாயகாதியர் வந்து தொண்டு செய்தாரென்பது விரோதமின்றெனில், அது அவர்க்கும் துணிவில்லை. தக்கபிரமாணமுமில்லை. மதிமறந்து கூறினும் விநாயகாதியரின் அம்சங்களே தொண்டரென்றாவது சொல்லித் தொலைக்காமல் சாக்ஷாத் விநாயகா தியென்ற தென்னையோ?

அன்றியும் சிவகலையே சங்கரராய்வந்த தென்ற முழுப் பொய்யையே எங்கு நிறுத்தப் பயந்து, சிவன் பிறந்திலன் மாயையே சங்கரராய்ப் பிறந்த தென்று கூறுதலை நோக்குவார்க்குச் சங்கரர் கர்மானு குணமாகப் பிறந்து திருவருளாற் பரிபாக மடைந்தவரென்னு முண்மை வெளியாகுமென்க.

நன்மை யென்று சரித்திரங்கூறப்புகுந்து சிவத்துரோகத்துக் கிடமானவகள் கூறின சரிதர், அச்சங்கரர் கோபத்துக்கே யிலக் காவரன்றி வேறில்லை. இன்னுமிவர் கூறும் பூர்வாபர விரோதம் பொருந்தாமைகள் பலவற்றையும் ஸ்தாலி­புலாகத்தாற் காண்க இவைகளைப் பிறர் மெய்யெனக் கொண்டு மயங்கா துண்மையுணரும் பொருட்டே திருவருளை வேண்டிநின்று இவர் சரித்திரத்தையுஞ் சுருக்கிக் காட்டி இந்நூல் செய்யப்பெற்றது.

நல்லது, சங்கரபாஷியம் பிரமம் ஒன்றொழிய மற்றெல்லாமித்தை யென்பது, உபநிடத வாய்மையாகவும் அதனைப் புறக்கணிப்ப தென்னெனிற் கூறுதும்; விரோதபுத்தியின்றி ஒருப்க்கங்கோடாமலுய்த்துணர்க. "பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப், பற்றுக பற்றுவிடற்கு" என்ற திவ்வியசுருதி சிரமேற்கொண்டு பிரபஞ்சப் பற்றை நீக்காதிறுகப்பற்றிய சீவர்கள், அப்பற்று முற்றும் விட்டொழிய வேண்டுமானால், அவையெல்லா மித்தையே யென்று அதற்குரிய உதாரணங்கள் பொருந்தக் கூறினாலன்றி அப்பற்று விட்டொழியாதென்னுங்கருத்தால் அவ்வுபநிடதங்கள் கூறினவன்றி வேறில்லை. அதனைப், பதிபசுபாச நித்தியங் கூறுகின்ற சுவேதாச்சுவதரமுதலிய எத்தனையோ பிரபலோபநிடதங்களாற் றெளிக.

மித்தை கூறும் உபநிடததாற்பரிய நோக்காமற் கொடிறும் பேதை யுங்கொண்டது விடாவென்றபடி மித்தியாவாதமே பற்றிநிற்பார் நித்தியங்கூறு முபநிடதங்களின் உண்மைப் பொருட்கு என்ன தாற்பரியங் கூறுவர்? கருதிகளெல்லாம், தியேயனுந் தியாதாவுமுள்பொருள் களென்றே கூறுகின்றன. மற்றெல்லாமித்தை யென்பவர்களும் அது வாசாமாத்திரமாயொழியத் தியேயனொருவனைத் தியானித்து வழிபடுகின்றவர்களாகவே யிருக்கின்றார்கள். இதனை, அவர்கள் நாடோ நியமமாகச் செய்துவருகின்ற ஸ்நானானுஷ்டான செபதபாதியான பூஜாதிகளே தெளிய விளக்கும்.

இனி அவை யெல்லாம் சற்காரியவாதபக்கமாய் நின்றுண்மையெனக் கருதிப் பலனைவிரும்பிச் செய்யவில்லையென்றால், அப்பூஜாதிகள் உலகரை மருட்டி வஞ்சித்துப் பொருள்கவரச் செய்யும் பொய்வேடமே யென்றாகி யிங்கு மிழிவுதந்து அங்கும் நிரய ஏதுவாய் முடியுமேயன்றி வேறில்லையென்க. இனி, இவர்களுந் தங்களுக்கு ஏதேனும் ஆபத்துவந்த பொழுது மற்றெல்லா மித்தையென் றிருகப் பற்றிய தடியோடோழிந்து இறைவனுண்டு நாமடிமை யென்று பற்றிப் பிரார்த்தனாதிகள் செய்து அவை பலன்கொடுத்துய்விக்கு உண்மையுமவர்களே அறிவார்கள்; அறிந்தும் ஆபத்து நீங்கியபின் முன்னைமித்தியா வாதமேற்கொண்டு வாய்மதம் பேசுவார்கள். இப்படியே இவர்களது ஒரு வழிப்படா நிலைமையுலகெலா முணரும். விரிப்பானேன்? அமைக.

இச்சங்கராசாரியராற் செய்யப்பெற்றுள்ள சிவபுஜங்கசுலோகம் (சஉ) ம், தேவிபுஜங்கசுலோகம் (உஅ) ம் ஆக (எ0) சுலோகங்களின் வாக்கிய தாற்பரியங்களை வரிசையாக (எ0) கவிகளில் அமைத்து மேலும் (38) கவிகள் சேர்த்துச் செய்யப்பெற்ற, வேதவனேசஸ்தவ மென்னும் நூலும் இச்சோமசுந்தரமாலையுடன் சேர்க்கப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate