ஞாயிறு, 19 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 2


18ம் தேதி சனிக்கிழமை, இரவு, இரண்டாவது முறையாக, புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அலுவலகத்தில் இருந்து சென்று வரவே நேரம் சரியாக இருந்தது.

கண்காட்சியிலோ புயல் வேகத்தில், அரங்குகளை கடக்க வேண்டியிருந்தது. என்னைக் கூட்டிக் கொண்டு வந்த நண்பர் அ.ப.ராசா, அநியாயத்திற்கு விரட்டிக் கொண்டிருந்தார். கவிஞர் முருகேஷ் மற்றும் அ.வெண்ணிலா ஆகியோரின் அறிமுகம்  கிடைத்தது.


திரை வசனகர்த்தா பாஸ்கர்சக்தி, ராசாவுடன் பேசி சென்றார். கவிஞர் கலாப்ரியா தனது நண்பர்களுடன் பேசியபடியே சென்றதைப் பார்த்தேன்.

மூடர்கூடம் திரைப்பட இயக்குனர் நவீன், என் எதிரில் என்னைக் கடந்து சென்றதைப் பார்த்து, ராசாவிடம் கூறினேன்.

இன்றைய பட்டியல் இதோ:
  1. கடவுள் ஒரு பொய் நம்பிக்கை -ரிச்சர்டு டாகின்ஸ் - தமிழில்: பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் - திராவிடர் கழக வெளியீடு - பக். 584 -ரூ.  350
  2. பெய்ரூத்தில் இருந்து ஜெருசலேம் வரை - ஆங்க் ஸ்வீ சாய் - தமிழில்: பெமினா - அடையாளம் - பக். 422 - ரூ. 320
  3. இஸ்லாம், தொடக்க நிலையினருக்கு - என்.ஐ.மதார் - அடையாளம் - பக். 196- ரூ. 160
  4. கேரளமும் போர்ச்சுக்கீசிய காலனி ஆதிக்கமும் - பதினாறாம் நுாற்றாண்டின் வரலாற்று ஆவணம் - அரபு மொழியில்:ஷெய்கு ஸைனுத்தீன் மக்துாமின் -  தமிழில்: ஷாகிர் அஸீம் - அடையாளம் - பக்.176 - ரூ. 160 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate