புதன், 22 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 3


20ம் தேதி விடுப்பாக இருந்ததால், அன்று மாலை 4:20க்கு மேல் புறப்பட்டு, புத்தக கண்காட்சிக்குச் சென்றேன்.

இந்த முறை, நான் சென்ற நாட்கள் எல்லாமே கொஞ்சம் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது.


புத்தக கண்காட்சியில் எப்போதும் தனியாகத் தான் புத்தகங்களைத் தேட வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.

இந்த முறை நான் தனியாக தேடினேன். சில நல்ல புத்தகங்கள் கிடைத்தன. இரவு 8 மணிக்கு சிவஞானம் வந்து சேர்ந்தார்.

காவ்யாவில் நான் பார்த்துக் கொண்டிருந்த போது, எனக்கருகில், சுகா நின்று கொண்டிருந்தார். நான் அவரை தொந்தரவு செய்யவில்லை.

புத்தக கண்காட்சி முடிய நாளை (22ம் தேதி) ஒருநாள் பாக்கியிருக்கிறது.  முடியட்டும். அதுபற்றிய என் கருத்துக்களை, ஒட்டுமொத்தமாக நெடுவளவில்  பதிவு செய்கிறேன்.

இங்கும் அது சம்பந்தமாக  ஒரு பதிவினை இடுவேன்.

மூன்றாம் முறையாக வாங்கிய நுால்களின் பட்டியல் இதோ:

 1. ஒரு சிப்பாயின் சுவடுகளில் (வண்ணத்தில் )- முத்து காமிக்ஸ் - ரூ.100
 2. ஆபரேஷன் சூறாவளி (கருப்பு வெள்ளை)  - முத்து காமிக்ஸ் - ரூ. 40
 3. நிலவொளியில் ஒரு நரபலி (வண்ணத்தில்)  - ரூ. 50
 4. இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்) - சோ.ந.கந்தசாமி - மெய்யப்பன் பதிப்பகம் - ரூ.430
 5. ஜவஹர்லால் நேரு சுயசரிதை - தமிழில்: வ.ரா- அலைகள் வெளியீட்டகம்- ரூ.680
 6. நினைவு அலைகள் - டாக்டர்.தி.சே.செள.ராஜன் - சந்தியா பதிப்பகம் - ரூ.225
 7. செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல்கள் - சந்தியா பதிப்பகம் -ரூ.75
 8. ஆலய பிரவேச உரிமை - பி.சிதம்பரம் பிள்ளை - தமிழில்: பேரா.சிவ.முருகேசன் - சந்தியா பதிப்பகம் - ரூ.190
 9. என் சுயசரிதை - பம்மல் சம்பந்த முதலியார் - சந்தியா பதிப்பகம் - ரூ.65
 10. ரோமாபுரி யாத்திரை - பாரேம்மாக்கல் கோவர்ணதோர் - தமிழில்: யூமா வாசுகி - சந்தியா பதிப்பகம் - ரூ. 380
 11. வ.வே.ஸு. ஐயர் - தி.சே.செள.ராஜன் - சந்தியா பதிப்பகம் - ரூ.45
 12. நவகாளி யாத்திரை (கோபுலு ஓவியங்களுடன்)  சாவி - சந்தியா பதிப்பகம் - ரூ. 55
 13. மறக்கப்பட்ட தீர்க்கதரிசி ஜே.சி.குமரப்பா - வெ.ஜீவானந்தம் - பூவுலகின் நண்பர்கள் - ரூ. 20
 14. தாது மணல் கொள்ளை - உண்மை அறியும் குழு அறிக்கை - மனித உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு - ரூ.20
 15. நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை - வெள் உவன்- தமிழினி - ரூ.80
 16. ந.மு.வேங்கடசாமி நாட்டார் நாட்குறிப்பு (தொகுதி 21 மற்றும் 22) - தமிழ்மண் - இரண்டும் தனித்தனியாக ரூ.195
 17. நடுநாட்டுச் சமணக் கோயில்கள் - த.இரமேஷ் - தமிழ்வேந்தன் பதிப்பகம் - ரூ.98
 18. பீகிள் கடற்பயணம் - சார்லஸ் டார்வின் - தமிழில்: அ.அப்துல் ரஹ்மான் - அகல் - ரூ. 475
 19. அரசியல் பெருஞ்சொல் ( அரசியல் பெருஞ்சொல், வ.உ.சி.கண்ட பாரதி, சிவஞான போத உரை ஆகிய மூன்று சிறு நுால்கள் அடங்கிய சிறு தொகுப்பு) - வ.உ.சி - வ.உ.சி. நுாலகம் - ரூ.30
 20. சம்பந்தரும் சமணரும் - தெ.பொ.மீ.,- மணிவாசகர் பதிப்பகம் - ரூ. 35
 21. ஈழத்துப் பண்டிதமணி - பேரா.சு.சுசீந்திர ராஜா - குமரன் புத்தக இல்லம், கொழும்பு - ரூ. 90
 22. சைவ சித்தாந்தம் மறுபார்வை - சோ.கிருஷ்ணராஜா - பூபாலசிங்கம் புத்தக சாலை, யாழ்ப்பாணம் - ரூ.25
 23. சமூகவியலும் இலக்கியமும் - கலாநிதி க.கைலாசபதி - குமரன் பப்ளிஷர்ஸ் - ரூ.80
 24. சைவ சித்தாந்தத் திறன் - ச.கங்காதரன் - சைவ சித்தாந்தப் பெருமன்றம் - ரூ.135
 25. ஞானியார் அடிகள் நினைவு மலர் - சைவ சித்தாந்தப்  பெருமன்றம் (2006ம் ஆண்டு பதிப்பு) - ரூ.35

5 கருத்துகள்:

 1. ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் விமர்சனம் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன் தரும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

  பதிலளிநீக்கு
 3. Where I will get the Akal Pathippakam books ? The number given by them is continuously ringing ( 044-28115584 ) no answer.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த தொலைபேசி எண் தான் இணையத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முகவரி இது: 342 டிடிகே.சாலை ராயப்பேட்டை சென்னை.600014.

   நீக்கு

Translate