புதன், 23 ஏப்ரல், 2014

உள்ளங்கவர் பெரியாழ்வார் – 1

நான் இதுவரை திவ்ய பிரபந்தத்தை முழுமையாக படித்ததில்லை. அவ்வப்போது சில பாடல்களை வாசித்ததுண்டு. சில பாடல்களை, பாம்பன் சுவாமிகளின் ‘சைவ சமய சரபம்’ என்ற நுால் வழியாக அறிந்ததும் உண்டு. 

ஆனால், கடந்த இரு நாட்களாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் புண்ணியத்தில், பெரியாழ்வார் திருமொழியை வாசித்து வருகிறேன்.


அதிலும் அவர், கண்ணன் மீது பாடிய பிள்ளைப் பருவ பாடல்களுக்கு இணை, ஒன்றுமில்லை.

அதில் எனக்கு பிடித்தவை:

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித் தாளுக்கங் காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளலில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்

சீதக்கடல் என்ற பாசுரம் முழுவதும்...அந்த பாதாதிகேச வர்ணனை, கண்ணனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

தேவாரத்திலும், ஒரு பாதாதி கேச வர்ணனை உண்டு.
அதை அடுத்து சொல்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate