வியாழன், 28 அக்டோபர், 2010

மீண்டும் வந்து விட்டேன்!

ன் வலைப்பூவில் நான் எழுதி சரியாக ஓராண்டு ஆகி விட்டது. இடையில் பல மாற்றங்கள். வேலையிலும், மனதிலும்.

ஆம்... ஓராண்டுக்கு முன் நான் கொண்டிருந்த சில கருத்துக்கள் தற்போது மாற்றம் பெற்றுள்ளன.


எதிர்காலத்தில் மேலும் பல கருத்துக்கள் மாற்றம் அடையலாம். அல்லது இப்போதிருக்கும் இதே கருத்துக்கள் கூட நிலை கொண்டிருக்கலாம்.

ஆனால், சுவாமி விவேகானந்தர் சொன்னபடி, ஒருவன் தன் சொந்த ஊரிலேயே பல காலம் இருந்து கொண்டு காலத்தைக் கடத்துவது என்பது, அவ்வளவு சிலாக்கியமானதல்ல தான்.

விவேகானந்தர் காலத்தில் இந்தியர்கள் பல விஷயங்களில் பின்தங்கி இருந்தனர். அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய போது சொன்ன வார்த்தைகள் தான் நான்
மேலே சுட்டிக் காட்டியவை.

என் விஷயத்தில் அவரது கருத்து 100 க்கு 100 சரிதான் என்பதை உணர்ந்துள்ளேன். அதேநேரம், இந்தச் சென்னையிலேயே என் பணியிடம் மாறிய பின்பு, பல மாற்றங்கள் என் சிந்தனையில் ஏற்பட்டுள்ளன என்பதும்
உண்மைதான்.

ஆம்... ஒருவனின் சூழல்தான் அவனை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் தான், சமயக் குரவர்கள் கூட அடியார் திருக்கூட்டத்தில் தங்களை வைக்க வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பித்தார்களோ
என்று தோன்றுகிறது.

இனி...

தொடர்ந்து எழுதுவேன். இந்த வலைப்பூவில் சைவ சமயம் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதுவேன் என்பதில்
எவ்வித மாற்றமும் இல்லை.

சங்கராசாரியார் சரிதம் சில பகுதிகளாக இதில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். அதையடுத்து, ராமானுஜர் பற்றிய நுõல் பற்றி எழுத இருக்கிறேன்.

எழுதுவற்கு இன்னும் பல விஷயங்கள் காத்திருக்கின்றன. ஆனால் மனதுதான் அடிக்கடி சலிப்படைகிறது. "சலியாத மனமும்' என்ற அபிராமி பட்டர் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.

தமிழகம் தழுவிய அளவில், அனைத்து சைவ அமைப்புகளும் பங்கேற்கத் தக்க விதத்தில், இணையத்தில் சைவ சமயத்துக்கான ஒரு பத்திரிகை துவக்க வேண்டும் என்று கருதியிருக்கிறேன். இதை வாசிக்கும் அன்பர்கள் அது குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

இன்று முதல் தொடர்ந்து இவ்வலைப்பூ இயங்க ஆரம்பிக்கிறது.

3 கருத்துகள்:

  1. nanri arumai

    valzhtthukkal

    ambaisivan

    பதிலளிநீக்கு
  2. நல்லா கீது நைனா.
    என்ன நீ அடிக்கடி மனசை மாத்திக்கிவீயா?
    எப்போதும் ஒரே மாதிரி கீரதுதான் நல்லது.
    சூழ்நிலை உன்ன மாத்தபிடாது! நீதான் சூழ்நிலைய மாத்தனும்.
    கோபுரத்துல ஏறிட்டா கடக்கால மறந்துடலாமா?
    எங்களயெல்லம் மறக்காத நைனா.
    நெல்லை நண்பன்.

    பதிலளிநீக்கு

Translate