புதன், 21 அக்டோபர், 2009

சங்கராசாரியர் சரித்திரவாராய்ச்சி- ஓர் அறிமுகம்

மீபத்தில் ராமானுஜர் பற்றி கல்வெட்டு அறிஞர் இரா.நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். The Myth Of Ramanuja என்பது அதன் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.


அதில் ராமானுஜர் வரலாறாக இன்று கூறப்படுவதில் பல அவருக்குப் பின்னால் வந்தவர்கள் சேர்த்து விட்ட கதை என்பது அவரது வாதம். நான் இன்னும் அந்த நூலை வாசிக்கவில்லை.


இது ஒருபுறம் இருக்கட்டும்.இந்த நூற்றாண்டில் சைவம் அச்சு ஊடகங்களின் வழியாக பரவத் துவங்கிய போது சைவர்கள் தங்கள் கருத்தை எளிதில் பரப்ப முடிந்தது. தமிழகத்தில் அச்சு ஊடகத்தைப் பயன்படுத்தியதிலும் அவர்கள்தான் முன்னோடி.


அவ்வகையில் தேவகோட்டை செட்டியார்களுக்குத் தனியிடம் உண்டு. அவர்கள் சைவத்துக்கு ஆற்றிய பணி இன்னும் முழுமையாகக் கணிக்கப் படவில்லை எனும் குறை என் மனதில் இருந்து வருகிறது.

சைவ உலகில் தனியிடம் பெற்றுள்ள வன்தொண்டச் செட்டியார் சீடர் ராம.சொ.சொக்கலிங்க செட்டியார், ஆதிசங்கரர் பற்றி தன்னுடைய கருத்தை ஒரு சந்தர்ப்பத்தில் வெளியிட்டுள்ளார்.

அக்கருத்து பற்றி சைவர்களிடையே முரண்பாடுகள் இருந்தாலும், மேலே காட்டிய நாகசாமியின் எண்ணத்தை ஒட்டியே இவரும் சிந்தித்துள்ளார் என்பதை அவர் எழுதிய கட்டுரை ஒன்றினால் அறியலாம். செட்டியார் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தவர்.

அவரது கட்டுரையை அடுத்த பதிவில் தருகிறேன்......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate