புதன், 31 அக்டோபர், 2012

புத்தம் புதிய புத்தகமே 1

(தினமலரில் வெளியான நாள்: 23-04-2010)

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள்.புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர்.


சனி, 27 அக்டோபர், 2012

குப்பையின்றி கோவில்களை பராமரிப்பது எப்படி? வழிகாட்டுகிறது மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில்

தமிழக வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது தாம்பரம் அருகேயுள்ள
மணிமங்கலம் கிராமம்.

மணிமங்கலம் போன்ற பல கிராமங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மூன்று கோவில்கள், வரலாற்றில் அந்த கிராமத்தின் இடத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

சனி, 20 அக்டோபர், 2012

சோழிங்கநல்லுாரில் ஒரு சங்கரநாராயணர் கோயில்


சிவபிரானின் 64 வடிவங்களில் முக்கியமானது அரியர்த்தர் எனப்படும் சங்கரநாராயண திருக்கோலம்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் சங்கரநாராயணருக்கு தனி சன்னிதி உள்ளது.

வியாழன், 18 அக்டோபர், 2012

பார்வை அளிக்கும் வெள்ளீச்சரத்து இறைவன்

மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலுக்கு அடுத்ததாகக்  குறிப்பிட்டுச் சொல்லும்படியான கோயில் என்றால் அது வெள்ளீசுவரர் கோயில் தான்.

வெள்ளி என்பதற்கு சுக்ரன் என்று அர்த்தம். இத்தலம் குருந்த மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததாக ஐதீகம். அதனால் தலவிருட்சமாக குருந்த மரம் உள்ளது.

புதன், 17 அக்டோபர், 2012

பிரம்மோற்சவத்திற்காக காத்திருக்கும் திரிசூல நாதர்


சென்னை வட்டாரத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில், திரிசூலத்தில் உள்ள, திரிசூல நாதர் கோயிலும் ஒன்று.

ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இக்கோவிலில் அத்தொன்மையைக் காட்டும் வகையில், இன்று இருப்பது மூலவர் கருவறை மட்டுமே. பிராகாரம், அம்பிகை சன்னிதி போன்றவை பிற்காலத்தியவை என தெரிகிறது.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

காத்திருக்கும் கழுக்குன்றம் கோயில்


தமிழகத்தின் மிகத் தொன்மையான கோயில்களில் ஒன்றான திருக்கழுக்குன்றம், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மலைக்  கோயில், மலை அடிவாரத்தில் உள்ள கோயில் என இரு கோயில்கள் உள்ளன.

திங்கள், 15 அக்டோபர், 2012

பார்த்தசாரதி ஏலப்பாட்டு

குஜிலி இலக்கியங்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளும், வேதவல்லித் தாயாரும் இடம் பெற்றுள்ளனர் என்பது, வரலாற்றாய்வாளர்களுக்கு ஆச்சரியமளிக்கும் தகவல்.

சென்னை கந்தக்கோட்டம் சுற்றியுள்ள பகுதி குஜிலி பஜார் என அழைக்கப்பட்டது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

இசைப்பவர்கள் இல்லாததால் முகவீணை அழிகிறது

மறைந்து வரும் இசைக் கருவிகளின் பட்டியலில் தற்போது முகவீணையும் இடம் பெற்றுள்ளது.

இன்று இதனை இசைப்பவர்கள் குறைந்து வருவதால், இதுவும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுவிடுமோ என, இசை ஆர்வலர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

சனி, 13 அக்டோபர், 2012

அசைந்தாடி வரும் அழகிய தேர்கள்

இந்த மண்ணுக்கே உரிய தொன்மையான தொழில்நுட்பக் கொடைகளில் ஒன்று, தேர். மிக அதிக எடை கொண்ட அடிப்பாகம், அதன் மேல் ஐந்தடுக்கு அலங்காரத் தட்டுகள், யாளி, சிம்மம், துவாரபாலகர், குதிரைகள் போன்ற பொம்மைகள், இத்தனையையும் சுமக்கும் நான்கு சக்கரங்கள் என, ஒரு நகரும் உலகத்தையே கண் முன் நிறுத்தும், நுட்பமான வடிவமைப்பு.

தமிழகக் கோவில்களில் பெரியவை, நடுத்தரமானவை, சிறியவை என, தேர்களை வகைப்படுத்தலாம். சமீப காலமாக சிறிய வகைத் தேர்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

100 ஆண்டுகளை கடந்த மிகப் பெரிய அதிகார நந்தி

சிற்பங்கள், உலோகத் திருமேனிகள், தேர் போன்றவை நூற்றாண்டுகளைக் கடந்து நிற்பதைக் கண்டிருக்கிறோம்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இரு வாகனங்கள் நூற்றாண்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன; ஒரு வாகனம் 200 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

தெப்பக்குளமும் தெரியாத உண்மைகளும்

கோவில் குளம் என்றதும், நம் நினைவுக்கு வருபவை திருவாரூர் கமலாலயமும், மதுரை பொற்றாமரைக் குளமும் தான்.

அதேபோல், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் என்றாலே, தெப்பக்குளத்தோடு கூடிய கோபுரக் காட்சி தான் நினைவில் நிழலாடும்.

Translate